September 15, 2026

Blog Post

Kalmunai Net > 2026 > September

தரம் 5 பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கே.எம்.எஸ். நகைக்கடை பரிசில்கள் வழங்கி கௌரவிப்பு

பட்டிருப்பு விநாயகர் வித்தியாலயத்தில்இ புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், களுவாஞ்சிகுடி கே.எம்.எஸ். நகைக்கடை உரிமையாளரும் மனிதநேய செயற்பாட்டாளருமான கே.எம்.எஸ். அவர்கள், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவித்தார், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் எதிர்கால வெற்றியையும் ஊக்குவிக்கும் இத்தகைய சிறப்பான செயற்பாடு பாராட்டுக்குரியதாகும். இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் அனைவரும் இணைந்து அவருக்கு தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். நிகழ்வில் பங்குபற்றிய வர்த்தக […]

Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணை

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்கள் மற்றும் இரண்டு இடையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் இன்று (07) திங்கட்கிழமை இடம்பெற்றன. நீதியரசர்களான மாயாதுன்ன கோரேயா மற்றும் எம்.சி.எல்.பி. கோபல்லவா ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணைகள் நடைபெற்றன. இதன்போது, மனுதாரரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக தனது சமர்ப்பணங்களை முன்வைத்தார். இவ்வழக்கு தொடர்பான […]

Read More

வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை (08.09.2026) ஆரம்பம்

(வி.ரி.சகாதேவராஜா -செல்வி வினாயகமூர்த்தி) இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 08.09.2026 நாளை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை நிறைவடையவுள்ளது. மகாபாரத இதிகாச வரலாற்றை அடிப்படையாக்க்கொண்டு சடங்குகள் நடைபெறும் இவ்வாலய திருவிழாக்கள் 18 நாட்கள் நடைபெறும். இலங்கையின் மிக நீண்ட தீக்குழி இவ்வாலயத்திலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 10ஆம் திகதி மாலை வியாழக்கிழமை மகாபாரதம் ஏடு திறத்தலும் மகாபாரத பாராயணம் இடம்பெறவுள்ளதுடன், 14ஆம் திகதி திங்கட்கிழமை […]

Read More

கல்முனை கார்மேல் பற்றிமாவின் புதிய அதிபராக லெபோன் சுதன் அடிகளார் கடமையேற்றார்

கல்முனை மாநகரின் பிரபல பாடசாலைகளில் உன்றான கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக வணக்கத்திற்குரிய லெபோன் சுதன் அடிகளார் (Rev. Fr. J. Lebourn Suthan OMI) இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். புதிய அதிபருக்கு கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்

Read More

கன்னியா காயத்திரி பீட ஆத்மயோக ஞானசபா  ஆலயத்தின்  மஹா கும்பாபிஷேக பெருவிழா

( வி.ரி.சகாதேவராஜா) திருகோணமலை, கன்னியா காயத்திரி பீட ஆத்மயோக ஞானசபா   ஆலயத்தின் புனராவர்த்தன ஏககுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்திப் பெருவிழா, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி, செப்டெம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிரியாரம்பம் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து செப்டெம்பர் 12ஆம் திகதி சனிக்கிழமை எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக செப்டெம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மஹாகும்பாபிஷேகம் காலை 9.05 […]

Read More

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பில் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்திற்குச் சென்று, கடந்த 31ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Read More

பிராந்திய பணிப்பாளர் டாக்டர் சகிலா தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார துறை வளர்ச்சி கண்டு வருவது பாராட்டுக்குரியது: ஆதம்பாவா எம் பி புகழாரம்

நிந்தவூர் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவில் ஆதம்பாவா எம் பி புகழாரம். செல்லையா பேரின்பராசா  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸதீன் ஒர் இரும்புப் பெண்மணி. அவருடைய தலைமையில் கல்முனை பிராந்தியம் சுகாதார துறையில் வளர்ச்சி கண்டு வருவது பாராட்டுக்குரியது.  இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா எம் பி தெரிவித்தார். நிந்தவூர் ஆதார […]

Read More

அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை  ஹெரோயினுடன் சிக்கிய  7 போதைப்பொருள் வியாபாரிகள்

 பாறுக் ஷிஹான் அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதன நடவடிக்கைகளின்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி ஆகியோரின் உத்தரவின் பேரில்இ உதவி பொலிஸ் அத்தியட்சகர்  சம்பத் விக்ரமரத்ன மாவட்ட  குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  தனுஷ்க ரத்நாயக்க மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு […]

Read More

341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக சம்மாந்துறை ஊடகவியலாளர் முபாறக் அஸ்லம் தெரிவு

நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் முபாறக் அஸ்லம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நல்ல ஊடகக் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் அரசாங்க தகவல் திணைக்களமும் Sri Lanka National Youth Services Council &Sri lanka Department Of Government Information இணைந்து ஏற்பாடு செய்துள்ள இளம் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் இன்று (04) தேசிய இளைஞர் சேவைகள் […]

Read More

தேசிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் அக்கரைப்பற்று இளைஞர் சுகிர்தகுமார் கிருஸ்மன் தெரிவு

ஜே.கே.யதுர்ஷன்.. நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பை பகுதியைச் சேர்ந்த சுகிர்தகுமார் கிருஸ்மன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஊடகத்துறையில் ஆர்வத்துடன் செயற்பட்டு வரும் சுகிர்தகுமார் கிருஸ்மன், சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவராகவும், ஒளிப்பதிவு மற்றும் புகைப்படக் கலைத்துறையில் ஈடுபட்டு வருபவராகவும் திகழ்கின்றார். அத்துடன், இசைத்துறையிலும் சிறந்து விளங்கும் இவர், பல பாடல்களை தனிப்பட்ட முறையில் உருவாக்கி வெளியிட்டுள்ளதுடன், தனது படைப்பாற்றல் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் […]

Read More