September 15, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணை

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணை

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்கள் மற்றும் இரண்டு இடையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் இன்று (07) திங்கட்கிழமை இடம்பெற்றன.

நீதியரசர்களான மாயாதுன்ன கோரேயா மற்றும் எம்.சி.எல்.பி. கோபல்லவா ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணைகள் நடைபெற்றன.

இதன்போது, மனுதாரரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக தனது சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி மற்றும் நவம்பர் 2ஆம் திகதி தொடர்ந்து நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *