-கே.எஸ்.கிலசன்-
கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற நாட்டிய சுடர் ஒளி விருதுக்கான உலகசாதனை நிகழ்வில் மண்டூர் கணேஷபுரம் சார்பாக கண்ணகி நிருத்தியாலய மாணவர்கள் பங்கு பற்றி சாதனை நிகழ்த்தி உள்ளார்கள்.
மண்டூர் பகுதியை சேர்ந்த கிராமங்களில் நடனத்துறையில் ஆர்வமுள்ளவர்களைஇணைத்து கண்ணகி நிருத்தியாலய ஸ்தாபகர் ஜெயலதா சுமேந்திரராஜவின் வழிகாட்டுதலுடன்
நடன ஆசிரியை திருமதி.வினித்தா நிலக்சன் அவர்களின் நெறிப்படுத்துதலுடன் பல மாணவர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றி உலகசாதனை விருதினை பெற்றுக்கொண்டனர்.
படுவான்கரை பிரதேசத்தில் அதிகஷ்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும் இவ்வாறானதொரு உலக சாதனை முயற்சியில் பங்கெடுத்தமை நடனத்துறையில் ஈடுபாடுள்ள பல மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக அமையும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.



