November 10, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > நாவிதன்வெளி பாரதி விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு

நாவிதன்வெளி பாரதி விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு

-சர்மிலன்-

நாவிதன்வெளி பாரதி விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டுக்கான பொது சீருடை வெளியீட்டு விழா (09.11.2026) நாவிதன்வெளி பல்தேவைக் கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கழக உறுப்பினர்களின் பெற்றோர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

இதன்போது பாரதி விளையாட்டுக்கழகத்தின் வீரர்களுக்கான பொது சீருடைகள் வெளியிட்டு வழங்கப்பட்டதுடன், வளர்ந்து வரும் பாரதியின் இளம் சிறார்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களுக்கும் ஆடைகள் வழங்கப்பட்டன. இச்செயற்பாடு இளம் தலைமுறையினரை விளையாட்டுத்துறையில் ஊக்குவிப்பதுடன், கழகத்தின் எதிர்கால வளர்ச்சியில் அவர்களையும் இணைத்துக்கொள்ளும் முக்கிய முயற்சியாக அமைந்தது.

பெற்றோர்களை அதிதிகளாக அழைத்துக் கௌரவித்தமை இந்நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக அமைந்ததுடன், கழகத்திற்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான உறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாகவும் இது அமைந்தது.

இந்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு கழக நிர்வாகத்தினர், உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் தமது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கியிருந்தனர்.

குறிப்பாக, தாயகத்தை விட்டு வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் பாரதி விளையாட்டுக்கழகத்தின் மீதும் அதன் இளம் தலைமுறையினர் மீதும் கொண்டுள்ள அன்பு மற்றும் பற்றின் காரணமாக பொருளாதார உதவிகள், ஊக்குவிப்பு மற்றும் ஆதரவுகளை வழங்கிய வெளிநாட்டு உறவுகளின் பங்களிப்பு விசேடமாகப் பாராட்டத்தக்கதாகும்.

தூர தேசங்களில் வாழ்ந்தாலும் மனதளவில் கழகத்துடன் இணைந்திருந்து இந்நிகழ்வின் வெற்றிக்குப் பங்களித்த வெளிநாட்டு உறவுகளுக்கு கழகம் தனது இதயம் கனிந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

விளையாட்டுச் செயற்பாடுகளுக்கு அப்பால், இளம் தலைமுறையினரை ஒன்றிணைத்து அவர்களிடையே ஒற்றுமை, ஒழுக்கம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் பாரதி விளையாட்டுக்கழகம் தனது பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *