சௌவியதாசன்
மட்டக்களப்பு – வெல்லாவெளி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டூர் 13 ஆம் கிராமம், விளினி அடி சந்தி பகுதியில் இன்று (நவம்பர் 10) காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சதானந்தம் மண்டூர் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த சதானந்தம் (வயது 65 மதிக்கதக்க ) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த விபத்தில் மற்றொருவரும் காயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளிப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
