November 10, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > றாணமடு இந்துவுக்கு கல்முனை ரோட்டரிக்கழகம் இசைக்கருவிகள்  வழங்கிவைப்பு 

றாணமடு இந்துவுக்கு கல்முனை ரோட்டரிக்கழகம் இசைக்கருவிகள்  வழங்கிவைப்பு 

( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை றோட்டரிக்கழகம் அதன் மேலும் ஒரு முயற்சியாக  சம்மாந்துறை வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்தில் உள்ள மத்திய முகாம் றாணமடு இந்துக்கல்லூரி மாணவ இசைக்குழுவுக்கான இசைக்கருவிகளை,( Band musical instruments) வழங்கி வைத்தது. 

இந்நிகழ்வு  கல்முனை றோட்டரிக்கழகத் தலைவர் ரோட்டரியன் இ.திருநாவுக்கரசு தலைமையில் நேற்று முன்தினம் (5) நடைபெற்றது.

நிகழ்வில் சம்மாந்துறை வலய பிரதி வலயக்கல்விப்பணிப்பாளர் பூ. பரமதயாளன், கழக செயலாளர் ரோட்டரியன் மு.சிவபாதசுந்தரம்,  மற்றும் அங்கத்தவர்களான ரோட்டரியன் ஐ.தரணிதரன், ரோட்டரியன் மு.அமிர்தசங்கர் , அதிபர்,ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 இறுதியில் மாணவர்கள் இசைக்கருவிகளை இசைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

இதற்கான நிதியை அவுஸ்ரேலியாவின் கன்பேரா றோட்டரிக்கழகம்  வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *