( வி.ரி. சகாதேவராஜா)
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்முனை நெற் ஊடக வலையமைப்பு ஒரு தொகுதி பெறுமதியான நூல்களை பாடசாலைகள் மற்றும் நூலகங்களுக்கு வழங்கி வருகின்றது.
கிழக்கில் புகழ் பூத்த மூத்த எழுத்தாளர் மறைந்த பிரபல எழுத்தாளர் முகில்வண்ணன்( பாண்டிருப்பு வே.சண்முகநாதன்- எலக்ரோன்) எழுதிய 18 நூல்கள் அடங்கிய நூல் தொகுதி இந்த நூலகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பு மாநகரசபை பொது நூலகம், நாவிதன்வெளி பிரதேச சபை பொதுநூலகம், அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு மையம், சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலயம், பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயம் போன்ற பல நூலகங்களுக்கு வழங்கி வருகிறது.
ஊடக வலையமைப்பின் ஸ்தாபகர் பு.கேதீஸின் ஏற்பாட்டில், ஆலோசகர் வி.ரி. சகாதேவராஜா, திட்ட இணைப்பாளர் பி. சந்திரமோகன், செயலாளர் கா.சாந்தகுமார், உறுப்பினர்களான பி.பாசம் புவி, என்.சௌவியதாசன் என்.அருளானந்தம், பி.கோகுலராஜன் பிரகலதன் மற்றும் எழுத்தாளர்களான ஜே.டேவிட், பாவாணர் அக்கரைப்பாக்கியன் ஆகியோர் இந்த நூல் தொகுதிகளை வழங்கி வைத்தனர்.




