மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குஞ்சர்குளம் கிராமத்தில் வசிக்கும் தேவை உடைய குடும்பங்களுக்கு கனடா சாயி இல்லம் அமைப்பினால் தலா 5,000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கனடா சாயி இல்லத்தின் பிரதிநிதிகளான திருமதி ரவிச்சந்திரன் மற்றும் அவரது புதல்வர் ரவிச்சந்திரன் யாதவன் ஆகியோர் உலருணவுப் பொதிகளை கிராம மக்களுக்கு வழங்கி வைத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பேரவையின் தலைவர் சீ. யோகேஸ்வரன் கலந்து கொண்டு மக்களுக்கான உதவிகளை வழங்கி வைத்தார்.
தேவை உடைய குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இவ்வுதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



