September 30, 2026

Blog Post

Kalmunai Net > 2026 > September

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு ஏஐ தொழில்நுட்ப செயலமர்வு!

செல்லையா பேரின்பராசா  யுனிசெப் மற்றும் சர்வோதயம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடாத்திய “சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம்” – எனும் தொனிப்பொருளில் நடாத்திய செயலமர்வு இன்று புதன்கிழமை (16.09.2026) மட்டக்களப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சர்வோதய மட்டக்களப்பு மாவட்ட பிரதி மாவட்ட முகாமையாளர் திருமதி வேணுஸ்ரீ புவனேந்திரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,சமூக வலைத்தள ஆய்வாளர் ரவீந்திரன் விதுர்ஷன் வளவாளராகக் கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு ( ஏஐ ) தொழில்நுட்பம் ஊடாக […]

Read More

தேசிய ரீதியில் பாவோதலில் முதலிடம் பெற்ற சதுரிகனுக்கு கௌரவிப்பு.

( வி.ரி. சகாதேவராஜா) அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டியில்போட்டியில் பா ஓதல் நிகழ்ச்சியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற முதலைக்குடா மகா வித்தியாலய மாணவன் சுரேஸ்குமார் சதுரிகனைப் பாராட்டி கௌரவிக்கும் விழா  பாடசாலையில் அதிபர் எஸ்.கிருபாகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.  பழையமாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில்,  பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி தேவறஜனி உதயாகரன் அதிதியாக கலந்து சிறப்பித்தார். விழாவில், சாதனை மாணவன் சதுரிகன் அவரது பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் புடைசூழ […]

Read More

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பில் புதிய பாதுகாப்பு நடைமுறை

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பில் புதிய பாதுகாப்பு நடைமுறை – குழந்தைகளுடன் பணிபுரிவோருக்கு குற்றச்சாட்டு இல்லையென சான்றிதழ்! பொதுச் சேவை ஆட்சேர்ப்பில் புதிய பாதுகாப்பு நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, குறிப்பாக குழந்தைகளுடன் நேரடியாக தொடர்புபட்டு பணியாற்றும் பதவிகளுக்கு புதிதாக நியமிக்கப்படுபவர்கள், தங்களுக்கு எதிராக குழந்தைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் […]

Read More

அர்ச்சுனாவுக்கு பயங்கரவாத தடுப்பு பரிவில் விசாரணை ஆரம்பம்

அர்ச்சுனா ராமநாதன் எம்பிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை ஆரம்பம் அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்று, அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் […]

Read More

அம்பாறையில் மாணவிகளுக்கு குழந்தை பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு – (Child Protection, Drug Prevention Program)

(செல்வி வினாயகமூர்த்தி) அம்பாறை மாவட்டம், பாலமுனை கமு/அக்/அல் ஹிதாயா மகளீர் கல்லூரியில் உயர்தரக் கலைப்பிரிவில் கல்வி கற்கும் 50 மாணவிகளுக்கான குழந்தைப் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு (Child Protection, Drug Prevention Program ) 14.09.2026 திங்கட்கிழமை இடம்பெற்றது. மட்டக்களப்பில் இயங்கி வரும் விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மையம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழிப்புணர்வு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றதுடன்சிறுவர் உரிமை மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய சரியான அணுகுமுறைகள் குறித்தும் […]

Read More

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு துறைநீலாவணை பொது தூலகத்தில் மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டி

செல்லையா பேரின்பராசா உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் துறைநீலாவணை பொது தூலகத்தில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டி 15.09.2026 செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது. இப் போட்டியில் துறைநீலாவணையில் உள்ள சித்திவிநாயகர் வித்தியாலயம்,  மெதடிஸ்த மிஸன் தமிழ் கலவன் பாடசாலை, விபுலாநந்த வித்தியாலயம் என்பவற்றில் கல்வி பயிலும் ஆரம்ப பிரிவு மாணவர்கள் பங்குபற்றினர். இப் போட்டிகளை நூலக உதவியாளர்களான திருமதி மோவிதா கவிதாஸ்,  சி.திவிசன் ஆகியோர் மேற்பார்வை செய்து […]

Read More

27 ஆண்டுகால கல்விச் சேவையின் தொடர்ச்சியாக அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் புதிய அதிபராக தங்கராசா இராசநாதன்.

(செல்வி வினாயகமூர்த்தி) அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கமு/திகோ இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக தங்கராசா இராசநாதன் 07.09.2026 அன்று கடமையேற்றுள்ள நிலையில், அவரை வரவேற்கும் நிகழ்வு இன்று (15.09.2026) செவ்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. 1998.01.26ஆம் திகதி கமு/திகோ கண்ணகி வித்தியாலயத்தில் ஆசிரியராக நியமனம் பெற்ற தங்கராசா இராசநாதன், பின்னர் கமு/திகோ/ திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் மகாவித்தியாலயத்திலும், கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 2016ஆம் ஆண்டு அதிபர் சேவைக்கான பரீட்சையில் […]

Read More

சம்மாந்துறை நீச்சல் தடாகம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு !பிரதேச சபை தவிசாளரின் துரித நடவடிக்கைக்கு உறுப்பினர். MLA.கபூர் பாராட்டு !!

சம்மாந்துறை நீச்சல் தடாகம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு !பிரதேச சபை தவிசாளரின் துரித நடவடிக்கைக்கு உறுப்பினர். MLA.கபூர் பாராட்டு !! (மின்மினி மின்ஹா) சம்மாந்துறை ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு நிலையத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் பல மாதங்களாகச் செயற்பாடின்றி காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீச்சல் தடாகம் நீண்டகாலமாகச் செயற்படாமல் காணப்படுவது தொடர்பில் கௌரவ MLA கபூர் அவர்களினால் 18.06.2026ல் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகளும் , முகநூல் மற்றும் […]

Read More

பாலையடியில் கொட்டும் மழைக்கு மத்தியில் களைகட்டிய தேரோட்டத் திருவிழா 

(   வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த  மகோற்சவத் திருவிழாவின் தேரோட்டத் திருவிழா நேற்று  (14) திங்கள் கிழமை கொட்டும் மழைக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.  திருவிழாக்கள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள்  தலைமையில், மகோற்சவ குரு சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவ பிரபாகரக் குருக்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான ஆண் பெண் பக்தர்கள் மழைக்கு மத்தியில் ” அரோஹரா” […]

Read More

கிழக்கு மாகாணத்தில் CBC Finance சேவைகள் விரிவு: கல்முனையில் 25ஆவது புதிய கிளை கோலாகல திறப்பு- பாடசாலைக்கு கணினி ஆய்வகமும் அன்பளிப்பு

பாறுக் ஷிஹான் கல்முனை, மட்டக்களப்பு வீதி, இலக்கம் 42 இல் அமைந்துள்ள இப்புதிய கிளையானது, பிராந்தியத்தின் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள், வர்த்தகர்கள் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு நவீன வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. CBC Finance PLC இன் தலைவர் ஷர்ஹான் முஹ்சின் (Sharhan Muhseen) தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில், நிறுவனத்தின் சிரேஷ்ட இயக்குநர் சரத் ஜயசூரிய, இயக்குநர்களான எம்.பி. தர்மசிரி, ஷர்மினி விக்ரமசேகர, நிறைவேற்றுப் பணிப்பாளர் டெலக்ஷன் ஹெட்டியாராச்சி, பிரதம வணிக […]

Read More