September 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு ஏஐ தொழில்நுட்ப செயலமர்வு!

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு ஏஐ தொழில்நுட்ப செயலமர்வு!

செல்லையா பேரின்பராசா 

யுனிசெப் மற்றும் சர்வோதயம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடாத்திய “சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம்” – எனும் தொனிப்பொருளில் நடாத்திய செயலமர்வு இன்று புதன்கிழமை (16.09.2026) மட்டக்களப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சர்வோதய மட்டக்களப்பு மாவட்ட

பிரதி மாவட்ட முகாமையாளர் திருமதி வேணுஸ்ரீ புவனேந்திரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,சமூக வலைத்தள ஆய்வாளர் ரவீந்திரன்

விதுர்ஷன் வளவாளராகக் கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு

( ஏஐ ) தொழில்நுட்பம் ஊடாக வெறுப்புப் பேச்சை எதிர்கொள்வது என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக வலைத்தள ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *