November 21, 2026

Blog Post

Kalmunai Net > 2026

புலனாய்வு ஊடகவியலாளர் பாரூக் சிஹானுக்கு ‘தினச்சுடர் தேசிய விருது – 2026’ வழங்கி கௌரவிப்பு!

ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் ஏற்பாட்டில், 25 வருட ஊடகப் பாரம்பரியத்தைக் கொண்ட ‘தினச்சுடர்’ பத்திரிகையின் ‘தினச்சுடர் தேசிய விருது – 2026’ வழங்கும் விழா இன்று (21.11.2026) சனிக்கிழமை மாளிகைக்காடு மேற்கில் அமைந்துள்ள பாவா றோயல் மண்டபத்தில் (Bawa Royale Hall) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதன்போது, பிராந்தியத்தின் முக்கிய செய்திகளையும், சமூகப் பிரச்சினைகளையும் துணிச்சலுடனும், பொறுப்புணர்வுடனும் வெளிக்கொணர்ந்து வரும் பிரபல சிரேஷ்ட புலனாய்வு ஊடகவியலாளர் பாரூக் சிஹான் (Farook Sihan) அவர்களின் ஊடகத்துறைப் பணிகளையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி, […]

Read More

வைத்திய அத்தியட்சகர் பிரதீபா பார்த்திபனின் 22 வருட அரச சேவையை பாராட்டி கல்முனையில் கௌரவிப்பு!

பைஷல் இஸ்மாயில் இலங்கையின் ஆயுர்வேத மருத்துவத்துறையில் 22 வருடங்கள் அரச சேவையில் அர்ப்பணிப்புடனும், பொறுப்புணர்வுடனும் பணியாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திருமதி பிரதீபா பார்த்திபனைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, (18) கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்திய சூரி வைத்திய கலாநிதி எம்.சி.எம்.காலித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு […]

Read More

கல்முனை ஸ்ரீ சத்ய சாய் சேவா நிலைய வருடாந்த இரத்த தான நிகழ்வு!

நா.பவதாகர் இன்றை தினம் கல்முனை வண்ணியார் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா நிலையத்தில் வருடாந்த இரத்ததான நிகழ்வு நிலைய உப தலைவர் திரு S. பாக்கியராஜா நடைபெற்றது . கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் இரத்த வங்கிப் பிரிவினுடாக இடம் பெற்ற இந்த நிகழ்வில் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி திருமதி S.சுபோசனா , வைத்தியர் SHM. வர்ஷாத்சுகாதார வைத்திய அதிகாரி AL. ரஸுஸ்மலேரியா பரிசோதகர் J. சஞ்சீவன் உள்ளீட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். […]

Read More

கல்முனை வடக்கில் ‘வீடு வீடாகத் திறன் பிரச்சாரம்’ வெற்றிகரமாக முன்னெடுப்பு!

சௌவியதாசன் ​கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில், தேசிய திறன் முன்னேடுப்புத் திட்டத்தின் கீழ் “வீடு வீடாகத் திறன் பிரச்சாரம்” (Door to Door Skill Campaign) இன்றைய தினம் (2026 நவம்பர் 21) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், “நீங்கள் உருவாகும் இடமே, நாடு உருவாகும் இடம்” மற்றும் “திறன் […]

Read More

உலக இகிமி துணைத் தலைவர் கொட்டகலை சிவானந்த நலன்புரி நிலையத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா)  அகில உலக ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் உபதலைவர்களில் ஒருவரான அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மகாராஜ் அவர்கள், கொட்டகலை ராமகிருஷ்ண மிஷனின் சிவானந்த நலன்புரி நிலையத்திற்கு நேற்று  வெள்ளிக்கிழமை(20)விஜயம் செய்தார்கள். கொழும்பு ராமகிருஷ்ண மிஷனின் இலங்கைக்கான தலைவரான ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகாராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு நிறைவு விழாக்களின் ஒரு பகுதியாக, கொட்டகலை சிவானந்த நலன்புரி நிலையத்தில் சிறப்பான மக்கள் சந்திப்பு நிகழ்வு மட்டக்களப்பு இகிமிசன் மேலாளர் […]

Read More

துறைநீலாவணையில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா.

செல்லையா பேரின்பராசா துறைநீலாவணை பொது நூலக வாசகர் வட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையுடன் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா 19.11.2026 வியாழக் கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. துறைநீலாவணை பொது நூலக வாசகர் வட்டத் தலைவரும்,  ஓய்வுநிலை அதிபருமான செல்லையா பேரின்பராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் […]

Read More

உலகளாவிய இகிமி  சுவாமி சுஹிதானந்தா ஜீ கதிர்காமம் விஜயம்; 50 ஆண்டுகளுக்கு முன் சுவீகரிக்கப்பட்ட இகிமி.மடத்தையும் பார்வையிட்டார்

( வி.ரி.சகாதேவராஜா)  உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ் தலைமையிலான குழுவினர் (19) வியாழக்கிழமை கதிர்காமம் மற்றும் செல்லக் கதிர்காமம் ஆகிய தலங்களுக்கு விஜயம் செய்தனர்.  மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் குருகுல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் ஏற்பாட்டில் இக் குழுவினர் விஜயத்தை மேற்கொண்டனர். உலகளாவிய   சுவாமி சுஹாதானந்தா ஜீ இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசினால் சுவீகரிக்கப்பட்ட கதிர்காமம் இகிமி.மடத்தையும் பார்வையிட்டார். குறித்த […]

Read More

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மூன்று நாள் திறன் அபிவிருத்தி பயிற்சி நெறி.

(றாசிக் நபாயிஸ்,மருதமுனை செய்தியாளர்) பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார விவகார அமைச்சின கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஊடாக பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான (17,18,19) மூன்று நாள் திறன் அபிவிருத்தி பயிற்சி நெறி மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சி நெறியானது கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக சுகாதார அமைச்சின் நிதி அனுசரணையில் இடம்பெற்றது. இப்பயிற்சியின் பிரதான வளவாளராகதேசிய அபாயகர ஒளடதங்கள் […]

Read More

அரச காணி ஆக்கிரமிப்பு விவகாரம்: அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் கைது!

(செல்வி வினாயகமூர்த்தி ) அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலக எல்லைக்குட்பட்ட அரசடி பகுதியில், தனிநபர் ஒருவரினால் அத்துமீறி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரச காணியிலிருந்து அவரை வெளியேற்றுவதற்காக கடந்த 10 ம்திகதி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட வெளியேற்றல் கட்டளையை நடைமுறைப்படுத்தச் சென்ற அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குறித்த நபர் இன்று (19) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வெளியேற்றல் கட்டளையை நடைமுறைப்படுத்தச் சென்ற கிராம உத்தியோகத்தர், பிரதேச சபை உறுப்பினர் மற்றும் வருமான உத்தியோகத்தர் […]

Read More

கல்முனை வடக்கில் பிரதேச நல்லிணக்க வலையமைப்பை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்.

(றாசிக் நபாயிஸ்) வேள்வி பெண்கள் அபிவிருத்தி ஒன்றியம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தும் “பல்லின சமூகங்களுக்கிடையே சமூக சகவாழ்வினை மேம்படுத்தல்” செயற்றிட்டத்தின் கீழ், கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச மட்ட நல்லிணக்க வலையமைப்பை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் கூட்டம் (19) நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் திரு. எம். அரவிந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் ஜனாப். ஏ.சி.ஏ. அஸீஸ் அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டு, நல்லிணக்க வலையமைப்பின் அவசியம், சமூக முரண்பாடுகளை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக விளக்கமளித்தார். வேள்வி பெண்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தவிசாளர் ஜனாபா எம். றிலீபா பேகம் மற்றும் திட்ட இணைப்பாளர் ஜனாப். எம்.ஐ. றியாழ் ஆகியோரும் செயற்றிட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக எடுத்துரைத்தனர். இக்கலந்துரையாடலில் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு எம். ஜீவராஜ் அவர்களும் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஜனாப் எம். எஸ். ஜலீல் அவர்களும் கலந்து கொண்டு  அறிவுரையை வழங்கினார்.  இக் ககலந்துரையாடலுக்கு சகவாழ்வுச் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், பிரஜாசக்தி குழுத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது, கல்முனை வடக்கு பிரதேசத்தில் சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மேம்படுத்துவதற்காக அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பிரதேச மட்ட நல்லிணக்க வலையமைப்பை உருவாக்கி, ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்தனர்.

Read More