November 22, 2026

Blog Post

Kalmunai Net > 2026

சமத்துவமும் சோசலிசமும் கனவு கண்ட தோழர் – க. பத்மநாபா- “சாதியால் மனிதன் ஒடுக்கப்படுவதை ஏற்காத மனிதர்” – சிறப்புக் கட்டுரை

வி.ரி. சகாதேவராஜா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியி(EPRLF) செயலாளர் நாயகம் அமரர் தோழர் க. பத்மநாபாவின் 75வது அகவை தினம் இன்று (19-11-2026) வியாழக்கிழமை ஆகும். 1951 நவம்பர் 19இல் யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் கந்தசாமி பத்மநாபா. தோழர்களால் ‘நாபா’, ‘ரஞ்சன்’ என அன்போடு அழைக்கப்பட்டவர். 1960களில் யாழ்ப்பாணத்தில் வெடித்த சாதி ஒழிப்புப் போராட்டமே அவரை முதலில் பாதித்தது. வேளாளர் குடும்பத்தில் பிறந்தும், சாதியால் மனிதன் ஒடுக்கப்படுவதை அவரால் ஏற்க முடியவில்லை. பின்னர் […]

Read More

நாளை (19) அமரர் தோழர் க. பத்மநாபாவின் 75வது அகவை தினம்; மல்வத்தையில் பிரதான நிகழ்வு

(வி.ரி.சகாதேவராஜா) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்(EPRLF) செயலாளர் நாயகம் அமரர் தோழர் க. பத்மநாபாவின் 75வது அகவை தினம் நாளை (19-11-2026) வியாழக்கிழமை ஆகும் . அதனை  முன்னிட்டு, அம்பாறை மாவட்ட மல்வத்தையில் விசேட பிரதான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. தோழர் பத்மநாபா சமூகசேவை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில், விசேட பூஜை வழிபாடுகளும், முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு மல்வத்தை, சடயந்தலாவ வீதியில் அமைந்துள்ள பாரதியார் பாலர் பாடசாலையில் நாளை […]

Read More

இன்று நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027 வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் – என்பிபி உறுப்பினர் மாத்திரம் நடுநிலை!!

​(வி.ரி. சகாதேவராஜா) ​அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவுத் திட்டம், 12 உறுப்பினர்களின் ஆதரவுடன்  இன்று (18) புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. என்பிபி உறுப்பினர் எஸ். நிரோஜன் மாத்திரம் நடுநிலை வகித்தார்.ஏனையோர் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். ​நாவிதன்வெளி பிரதேச சபையின் 17ஆவது கூட்டத்தொடரும், 2027ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவுத் திட்ட அமர்வும் தவிசாளர் இ.ரூபசாந்தன் தலைமையில் இன்று காலை ஆரம்பமானது.  சபை நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, கார்த்திகை மாதத்தில் உயிர் […]

Read More

கல்முனை மற்றும் சாய்ந்தமருதுக்கு விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்?

-கிஷோ- கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்முனை மாநகர சபையிலிருந்து பிரித்து சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை அமைக்கப்பட வேண்டும் என அப்பிரதேச மக்களால் தொடரப்பட்ட வழக்கு நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் இதுவரை நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பில் சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபையை அமைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில், எல்லை நிர்ணயப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, […]

Read More

அம்பாறையில் திடீர் கடல் கொந்தளிப்பு-பெரியநீலாவணை முதல் அக்கரைப்பற்று வரை கடற்கரை வீதியைத் தாண்டி புகுந்த கடல் நீர்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை இஸ்லாமபாத், கடற்கரைப்பள்ளி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், பாலமுனை, ஒலுவில், அட்டப்பளம், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட பல பிரதேசங்களில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட கடற் கொந்தளிப்பு காரணமாக, கடல் நீர் கடற்கரை வீதியையும் தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. திடீரென ஏற்பட்ட இக் கடற் கொந்தளிப்பினால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் மற்றும் பாண்டிருப்புப் பகுதிகளில் கரையோரமாக அமைந்துள்ள பல வீடுகளும் […]

Read More

பாண்டிருப்பு சிவன் ஆலயத்தின் 2027ஆம் ஆண்டுக்கான பஞ்சாங்க நாட்காட்டி வெளியீடு!

பாண்டிருப்பு சிவன் ஆலயத்தின் 2027ஆம் ஆண்டுக்கான பஞ்சாங்க நாட்காட்டி வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இன்று 18.11.2026 ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது, ஆலயத்தின் பிரதமகுருவான சத்தியோஜாத சிவாச்சாரியார் சிவஸ்ரீ வசந்த டிமலேஸ்வர குருக்கள் அவர்களினால் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து, ஆலய நிர்வாக சபையினரால் 2027ஆம் ஆண்டுக்கான பஞ்சாங்க நாட்காட்டி விநியோகம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நாட்காட்டியைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் ஆலய நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி விசேட பூஜை எதிர்வரும் 22ஆம் திகதி!

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமியின் விசேட பூஜை நிகழ்வுகள் எதிர்வரும் 22ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளன. வித்யா சாகரன், மதுரா சாதகர் சிவஸ்ரீ கணேஷ திவிசாந்த குருக்கள் மற்றும் ஸ்ரீ தர்மசாஸ்த்ர யாத்திரைப் பேரவையின் குருசாமி ஜெ. ஜெசிந்திரகுமார் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்போது, காலை 10.00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு விசேட அபிஷேகம் மற்றும் அலங்காரம் இடம்பெறுவதுடன், அதனைத் தொடர்ந்து ஐயப்பன் பஜனை […]

Read More

அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட வேண்டிய கல்முனை – யாழ்ப்பாணம் பேருந்து 6 மணி வரையும் புறப்படவில்லை; பயணிகள் கடும் அவதி!

கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று 18.11.2026 அதிகாலை 4.30 மணிக்குப் புறப்பட வேண்டிய இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, காலை 6 மணி வரையும் கல்முனை பேருந்து நிலையத்திலிருந்து புறப்படாததால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். அவசர தேவைகள் நிமித்தம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த பயணிகள், அதிகாலை 4.30 மணிப் பேருந்தை நம்பி முன்பதிவு செய்திருந்ததுடன், ஏனைய பயணிகளும் உரிய நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு வருகை தந்து காத்திருந்தனர். எனினும், […]

Read More

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி திருக்கல்யாண நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று (16) முருகப்பெருமானுக்கான திருக்கல்யாண வைபவம் பக்திபூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. ஆலயத்தின் பிரதம குரு சத்தியோஜாத சிவாச்சாரியார் சிவஸ்ரீ வசந்த டிமலேஸ்வரக் குருக்கள் தலைமையில் கிரியைகள் மற்றும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவத்தில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு அருள்பெற்றனர். பக்தி நிறைந்த சூழலில் நடைபெற்ற இந்நிகழ்வு கந்தசஷ்டி விரதத்தின் நிறைவாக அமைந்தது.

Read More

திருக்கோவிலில் இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைஞர்களுக்குப் பரிசில் வழங்கும் நிகழ்வு!

– ஜே.கே.யதுர்ஷன் கலாசார அலுவல்கள் திணைக்களமும் திருக்கோவில் பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய பிரதேச மட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு இன்று (17) திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நிரோஜினி தவநீதன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிப் பிரதேச செயலாளர் ஆர். சுவாகர் கலந்து சிறப்பித்தார். மேலும், நிர்வாக உத்தியோகத்தர் வை.பி. […]

Read More