November 24, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

மோதலை முடிவுக்குக் கொண்டுவர 7 நாள் திட்டம்: ஈரான் முன்மொழிவு: அமெரிக்கா நிராகரிப்பு?

அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளுக்குப் பதிலாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கத் தயார் என அறிவிப்பு ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஏழு நாள் காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்ட புதிய திட்டமொன்றை ஈரான் முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி முன்வைத்துள்ளதாகக் கூறப்படும் இந்தத் திட்டத்தில், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை நீக்குதல், ஈரானின் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவித்தல் மற்றும் எண்ணெய் விற்பனை மீதான […]

Read More

வைத்திய கலாநிதி அழகையா லதாகரன் அவர்களுக்கு பாராட்டு

கதிர்காம பாதயாத்திரிகளுக்கு கடந்த 12 வருடங்களாக தொடர்ச்சியாக மருத்துவ முகாமினை முன்நின்று நடத்தி வரும் வைத்தியர் அ. லதாகரனுக்கு கதிர்காமம் கிரிவெஹெர ராஜமகா விகாரையின் பிரதம குரு (வணக்கத்திற்குரிய கொபவாக தம்மிந்த நாயக்க தேரர்) அவர்களும், ஆலய நிர்வாகமும் இணைந்து  அவரது சேவையை பாராட்டி கௌரவித்துள்ளனர். இது பற்றி வைத்திய கலாநிதி அ.லதாகரன் அவர்கள் பெருமிதத்துடன்இவ்வாறு கூறியுள்ளார்.நாமும் பெருமை கொள்கிறோம். “என் வாழ்வின் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று இன்று கடந்த 12 வருடங்களாக கதிர்காமம் / […]

Read More

பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் உட்பட சாதனையாளர்கள் கௌரவிப்பு.

பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் உட்பட சாதனையாளர்கள் கௌரவிப்பு. (செல்வி வினாயகமூர்த்தி) பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் 2024 முதல் 2026ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (26) சனிக்கிழமை நடைபெற்றது. பாடசாலையின் கலாசார மண்டபத்தில் அதிபர் க. கமலராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் T. உதயகுமார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.நிகழ்வில் நிதி […]

Read More

மற்றுமொரு இலஞ்சக் குற்றச்சாட்டு: சிறைச்சாலையில் நாமல் ராஜபக்ஷவிடம் விசாரணை

டிரான்ஸ்வொர்க் சதுக்க நில விவகாரம்: நாமல் ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு கொழும்பு கோட்டை டிரான்ஸ்வொர்க் சதுக்க நிலத்தை விரைவாகப் பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, கிரிஷ் (Krrish) தனியார் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவிடமிருந்து மூன்று சந்தர்ப்பங்களில் 70 மில்லியன் ரூபாய் (700 இலட்சம்) லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. கொழும்பு பிரதம நீதவான் அசங்க […]

Read More

அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு ஸ்ரீ நாககாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா – 2026

( அ . யனுஷ்பிரஜன் ) பனங்காடு தன்னில் வயல் வளமும் நீர் வளமும் நிறைந்த தில்லையாற்று அருகே சிவபூமி மண்ணில் பலகலையாக வடிவெடுத்து கோவில் கொண்டு பல ஊர் மக்களும் நோய் தீர்த்து மக்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ நாககாளி அம்மனுக்கு 2026.09.26ம் திகதி சனிக்கிழமை பக்தர்கள் மஞ்சள் குளித்து தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்று அம்மன் திருக்குளிர்த்தி இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து திருப்பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு தில்லையாற்றில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது பக்தர்கள் கலந்து கொண்டு அன்னை நாககாளி […]

Read More

கல்முனை, அக்கறைப்பற்று மாநகர சபைகளுக்கு கொழும்பு மாநகர சபையினால் தீயணைப்பாளர்களுக்கான அங்கிகள், பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு.!

(அஸ்லம் எஸ். மெளலானா) கல்முனை மாநகர சபை மற்றும் அக்கறைப்பற்று மாநகர சபை ஆகியவற்றுக்கு கொழும்பு மாநகர சபையினால் தீயணைப்பு வீரர்களுக்குரிய பெறுமதியான தீயணைப்பு அங்கிகள் மற்றும் ஒரு தொகுதி தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மாநகர சபையில் கொழும்பு மாநகர மேயர் விராய் கெலி பஸ்தசார், கல்முனை மாநகர சபையினதும் அக்கறைப்பற்று மாநகர சபையினதும் ஆணையாளர் என்.எம். நௌபீஸ் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. கல்முனை மாநகர சபை மற்றும் […]

Read More

கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு; சாதனை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு.

(செல்வி வினாயகமூர்த்தி) 2026ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகி பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் எஸ். கீர்த்திகா 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலாம் இடத்தையும், 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.20 வயதிற்குட்பட்டோர் பிரிவில் என். தருகா 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய […]

Read More

சாய்ந்தமருது முதல் நிந்தவூர் வரையிலான கடற்கரையோரங்களில் சட்டவிரோத கடல்மண் கடத்தல் தீவிர அதிகரிப்பு:

கடற்கரைகளில் சட்டவிரோத கடல்மண் கடத்தல் தீவிர அதிகரிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை! (பாறுக் ஷஹான்)அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது முதல் நிந்தவூர் வரையிலான கடற்கரையோரங்களில் அண்மைக்காலமாகச் சட்டவிரோதமான முறையில் உரப்பைகளில் அடைக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள்கள் மூலம் கடல்மண் கடத்தப்படும் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. அதிகாலை வேளை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக இச் சட்டவிரோத மண் கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அப்பகுதிச் செய்தியாளர் பாறுக் ஷஹான் தெரிவிக்கின்றார். சோதனைகள் நிறுத்தப்பட்டதால் மேலெழும் கடத்தல்ஆரம்ப […]

Read More

காரைதீவு ராஜ்மோகனின் 43வது படைப்பான சுவாமி விபுலானந்தர் புகழ் பாடல்  வெளியீடு!

( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் தமிழின் தவப்புதல்வர் சுவாமி விபுலானந்தரின் வாழ்வும் தத்துவமும் போற்றும் புகழ் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. காரைதீவின் பிரபல பாடலாசிரியரும், எழுத்தாளருமான இரா. ராஜ்மோகனின் 43வது பாடலாக இந்த புகழ் பாடல் சுய ஆக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. Asiians Records நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த பாடலுக்கு, பாடல் வரிகளை யாத்து பாடியவர் காரைதீவு இரா. இராஜ்மோகன் ஆவார். இசையை  விநாயகமூர்த்தி செந்தூரனும்,  அனுசரணை & தயாரிப்பை சோ. […]

Read More

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு: 7 பேர் காயம்; மூவர் கவலைக்கிடம்

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் இன்று (26) சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலின்டர் வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் வைத்தியசாலைக் கட்டடத்திற்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காகப் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More