November 24, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாகச் செயற்பட வேண்டும்-உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வலியுறுத்தல்- இனமுரண்பாடுகளைத் தூண்டும் பேச்சுகளைத் தவிர்த்து கருணை மனு மூலமே தீர்வு காண முடியும் என அறிவிப்பு

(பாறுக் ஷிஹான் ) சவூதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜன் விடயத்தில், இலங்கையின் அரசியல்வாதிகள் எதைப் பேசுவது, எதைப் பேசக்கூடாது என்பதில் தவறி வருவதாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் சாடியுள்ளார். அனோஜன் விவகாரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: “இவ்விவகாரத்தில் சிவஸ்ரீ சிறிதரன் எம்பி பேசிய வார்த்தைகள் மிகவும் பாரதூரமானவை. அவர் ஒரு நாட்டின் சட்ட திட்டங்களைத் […]

Read More

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியாவும், றியாசாவும் SLEAS-1 தரத்திற்கு தரமுயர்வு

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களாகக் கடமையாற்றி வரும் என். வரணியா சாந்தரூபன் மற்றும் எம்.எச். றியாஸா ஆகியோர் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர். கல்வி நிர்வாகத் துறையில் தமது திறமை, அனுபவம், அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த நிர்வாகத் திறனை வெளிப்படுத்தி வரும் இருவருக்கும் கிடைத்துள்ள இத்தரமுயர்வு, அவர்களின் நீண்டகால சேவைக்குக் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. கல்முனை கல்வி வலயத்தின் கல்வி நிர்வாக நடவடிக்கைகளை திறம்பட […]

Read More

நேற்று பாண்டிருப்பில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற வனவாசம்;சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு 

படங்கள் – (வி.ரி.சகாதேவராஜா- Sanjeevanviews) வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீப்பள்ளய உற்சவத்தின் வனவாசம் நிகழ்வு நேற்று  (23) புதன்கிழமை மாலை பக்திபூர்வமாக நடைபெற்றது.  சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த நிகழ்வில் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் குளக்கட்டு வயல் பிரதேசம் எல்லாம் நடந்து இந்த வனவாசத்தை நிறைவு செய்வது பக்தர்களின் வழக்கமான செயற்பாடாகும். ஆலயத்தில் விசேட பூஜையுடன் பஞ்ச பாண்டவர்கள் ஐவர் சகிதம் பிற்பகல் 3.30 […]

Read More

ஒளிர் சஞ்சிகை வெளியீடு 

( வி.ரி.சகாதேவராஜா) அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் “ஒளிர்” எனும் சஞ்சிகையை  வெளியிட்டு வருகிறது.  அதன் இரண்டாவது இதழ் அண்மையில் வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதன் அறிமுவிழா கடந்த வாரம் சஞ்சிகையின் உதவி ஆசிரியரும் மேற்படி நிறுவனத்தின் கல்முனை பொறுப்பாளருமான திருமதி ஜெனிதா மோகன் தலைமையில் கல்முனை தமிழர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. விழுது நிறுவனப் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இவ் விழாவில் இச் சஞ்சிகை வழங்கி வைக்கப்பட்டது.

Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக ஹபீப் ரிபான் பதவியேற்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) உறுப்பினர் ஹபீப் ரிபான் இன்று (24) புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, சபாநாயகர் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த எம்.எஸ். அப்துல் வாஹித் அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமானது. இதனையடுத்து, ஏற்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ஹபீப் […]

Read More

அனோஜனுக்கு கருணை காட்டுமாறு முன்னணி ஊடக அமைப்புகள் சவூதி அரசிடம் வேண்டுகோள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றுமாறு நாட்டின் 5 முன்னணி ஊடக அமைப்புகள் சவூதி அரேபிய ஆட்சியார்களிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. சுதந்திர ஊடக இயக்கம் (FMM), இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (SLWJA), தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் (TMA), ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) மற்றும் தெற்காசிய ஊடகப் பெண்கள் அமைப்பு (SAWM) ஆகிய ஊடக அமைப்புகள் […]

Read More

வெருகலம்பதி ஸ்ரீ சித்தி வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம்: 12-ஆம் நாள் திருவிழா !

வெருகலம் பதியிலிருந்து.சௌவியதாசன் ​வெருகலம்பதி. அருள்மிகு ஸ்ரீ சித்தி வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா தற்போது மிக விமர்சையாகவும் பக்திப் பெருக்குடனும் நடைபெற்று வருகின்றது. ​கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி (12-09-2026) கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழா, தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவுள்ளது. பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கும், பஞ்சவாத்தியங்களுக்கும் மத்தியில் சிறப்பு வழிபாடுகளுடன் திருவிழா நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ​12-ஆம் நாள் திருவிழா மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகள்நேற்று நடைபெற்ற 12-ஆம் நாள் திருவிழா, […]

Read More

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் முன்வைத்துள்ள வினயமான வேண்டுகோள்

: சவுதி அரபு இராச்சியத்தில் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிற மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கான பல முயற்சிகளை இன, மத பேதமில்லாமல் அனைத்து சமூகங்களைச் சார்ந்த தலைவர்களும் தற்போது மேற்கொண்டுள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதில் இஸ்லாமிய தலைவர்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மத தலைவர்களும் தாங்களாகவே முன்வந்து இந்த அளப்பெரும் பணியைச் செய்கிறார்கள். அதேவேளையில் இ‌‌ந்த ஒற்றுமையைக் குலைப்பதற்கென்றும் இந்த முயற்சி தோல்வியடைய வேண்டும் என்ற […]

Read More

இலத்திரனியல் வாகன அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இலத்திரனியல் வாகன அனுமதிப்பத்திர கட்டமைப்பை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதையடுத்து, நாளை முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை 8 மாகாணங்களில் இலத்திரனியல் வாகன அனுமதிப்பத்திர விநியோக சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது. இதற்கமைய மத்திய, வடமத்திய, வடமேல், தென், கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். இலத்திரனியல் கட்டமைப்பை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், எதிர்வரும் 29ஆம் திகதி முதல் குறித்த மாகாணங்களில் வாகன அனுமதிப்பத்திர விநியோகப் பணிகள் வழமைக்குத் […]

Read More

அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாண முஸ்லிம்களும் குரல் கொடுக்கின்றோம்”: யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் வலியுறுத்தல்!

சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்து மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டுகோள் பாறுக் ஷிஹான் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை விடுவிக்க வேண்டும் என்ற தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான கோரிக்கையோடு, யாழ்ப்பாண முஸ்லிம் மக்களும் முழுமையாகக் கை கோர்ப்பதாக யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் கௌரவ என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (23) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் […]

Read More