November 24, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

கல்முனையின் சமூகப் பணியாளர் அ. டிலான்ஷன் – மு. ராஜேஸ்வரன் , சந்திரசேகரம் ராஜன் இரங்கல் செய்தி

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு. ராஜேஸ்வரன் அனுதாபம் கல்முனையின் சமூகப் பணியாளர் அ. டிலான்ஷன் காலமானார் – மு. ராஜேஸ்வரன் அனுதாபம்கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் முன்னாள் தலைவரும், இனப்பற்றும் சமூக அக்கறையும் கொண்டவருமான அ. டிலான்ஷன் காலமானார். அவரது மறைவு கல்முனை மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்முனையில் எங்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும், அந்த இடத்துக்கு விரைந்து சென்று, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து மக்களுடன் துணைநின்றவர் டிலான்ஷன் என முன்னாள் கிழக்கு மாகாண […]

Read More

கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் முன்னாள் தலைவர் அ.டிலான்சன் (டிலு) காலமானார்!

கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் முன்னாள் தலைவர் அருள்ஞானமூர்த்தி டிலான்சன் (டிலு) சுகயீனம் காரணமாக இன்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்

Read More

தாராள உள்ளங்கள் அறக்கட்டளையால் மாணவிக்கு மடிக்கணினி வழங்கி வைப்பு

கல்வி முன்னேற்றத்திற்கான பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வரும் கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பினால், பாண்டிருப்பைச் சேர்ந்த தந்தையை இழந்த பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு அவரது கல்விச் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் மடிக்கணினி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 26.09.2026 அன்று இடம்பெற்ற இந்நிகழ்வில், தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மாணவிக்கு மடிக்கணினியை வழங்கி வைத்தனர். மாணவியின் கல்வித் தேவையை கருத்திற்கொண்டு இந்த உதவியை வழங்குவதற்கு நிதிப் பங்களிப்பை மேற்கொண்ட அறக்கட்டளையின் உறுப்பினர் திரு. குலதீபன் […]

Read More

ஊடகவியலாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சிப் பட்டறை அக்கரைப்பற்றில்

நூருல் ஹுதா உமர் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் துறையில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைத்து, ஊடகப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான ஒருநாள் பயிற்சிப் பட்டறை இன்று (28) அக்கரைப்பற்று ஹல்லாஜ் மண்டபத்தில் நடைபெற்றது. “AI for All – One-Day Workshop for Media Professionals” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் அச்சு ஊடகம், வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகம் மற்றும் உள்ளடக்க உருவாக்கம் உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக […]

Read More

திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து திருக்கோவிலில் போராட்டம்

திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து திருக்கோவிலில் போராட்டம் (செல்வி வினாயகமூர்த்தி) அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக,நல்லூரில் தியாக தீபம் திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுமாறு கோரியும் இன்று திங்கட்கிழமை (28) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாட்டில், தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு இப்போராட்டம், முன்னெடுக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் […]

Read More

ஈழத் தமிழர் முன்னணி கட்சி அனோஜனின் விடுதலை கோரி களுவாஞ்சிக்குடி தொடக்கம் திருகோணமலை வரை வாகன பேரணி கையெழுத்து சேகரிப்பு!

(கனகராஜா சரவணன்) ஈழத் தமிழர்; முன்னணி கட்சி சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் மன்னித்து விடுதலை செய்ய கோரி களுவாஞ்சிக்குடி தொடக்கம் திருகோணமலை வரையிலான வாகன பேரணி கையெழுத்து சேகரிப்பில் இன்று திங்கட்கிழமை (28) கிரானில் உள்ள கட்சி காரியாலயத்தில் இருந்து ஆரம்பித்தனர். கட்சியின் தலைவர் ஜெயா சரவணாவின் நெறியாள்வையின் கீழ் கட்சியின் நடவடிக்கையாக சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுவிக்க கோரி பாரிய ஒரு கையெழுத்து போராட்டமான வாகன பேரணி கிரானில் அமைந்துள்ள கட்சிக் […]

Read More

நற்பிட்டிமுனை மண்ணின் சாதனையாளர்களை கௌரவித்த அல்-கரீம் பவுண்டேஷன்!

பாறுக் ஷிஹான் பிரதம அதிதியாகப் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் பங்கேற்பு; ஊவா வெல்லச பல்கலைக்கழகப் பதிவாளர் எம். ஜெசீல் விசேட கௌரவம் நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “மண்ணுக்கு மகுடம் சூட்டிய சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா” நேற்று சனிக்கிழமை (26) சவளக்கடை ரோயல் கார்டன் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்-கரீம் பவுண்டேஷன் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி ஹலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற […]

Read More

அர்ச்சுனா எம்.பி.இ முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு அழைப்பாணை

எம்.பி அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரும் 12ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு; வைத்தியர் சுகுணன் பற்றி முகநூலில் எழுத தடை விதிப்பு – கனகராஜா சரவணன்;) கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கும் யூடியூப். முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் […]

Read More

இன்று பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு

2026 செப்டம்பர் 28ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவித்தல் அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் […]

Read More

அனோஜனின் விடுதலைக்காக சவூதி அரேபியா செல்லும் குழுவில் கோடீஷ்வரன் mp ம் செல்கிறார்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மேன்முறையீட்டுக் கடிதத்தை சவூதி அரேபிய மன்னரிடம் சமர்ப்பிக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று விரைவில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது. சவூதி அரேபியாவிற்கு செல்லவுள்ள இக்குழுவில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் செல்லவுள்ளார் எனும் அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டிருந்தார்.

Read More