November 24, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

இன்று காரைதீவில் கோலாகலமாக நடைபெற்ற சர்வதேச சிறுவர் தினவிழா

சர்வதேச சிறுவர்தின விழாவையொட்டி காரைதீவு மக்கள் வங்கி முகாமையாளர் திரு.உமாசங்கரன் தலைமையில்,  இ.கி.சங்க பெண்கள்  பாடசாலை மாணவிகளுடன் சிறுவர்தின நிகழ்வு இன்று (01) வியாழக்கிழமை மிக்கிமவுஸ் இன்னிசையுடன் கோலாகலமாக இடம் பெற்ற போது…. படங்கள் : வி.ரி.சகாதேவராஜா

Read More

பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் உலக சிறுவர் தினநிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!

​​கமு/ பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் உலக சிறுவர் தின விழா இன்றைய தினம் (அக்டோபர் 01) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ​பாடசாலையின் பிரதி அதிபர் திரு. M.S.முசாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கனடா ‘உதவும் பொற்கரங்கள்’ அமைப்பின் இணைப்பாளரும் கல்முனை நெற் ஊடகவியலாளருமான திரு. என். சௌவியதாசன் அவர்கள் கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். மேலும் அக்ரோ மொமெண்டும் தனியார் கம்பனி முகாமையாளர் திரு.K. மேனன்,இந்து கலாசார திணைக்கள வளவாளர் செல்வன் சனாதனன்,உதவி […]

Read More

விமானத்தில் கத்தியால் குத்தப்பட்டும் 174 பேரை காப்பாற்றிய இந்திய விமானி – கேப்டன் ஸ்மித் மச்சார்

காயமடைந்த நிலையிலும் காக்பிட் கதவை திறக்க உதவி; சவுதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட Flydubai விமானத்தில் ஏற்பட்ட திடீர் வன்முறை சம்பவத்தின்போது, கத்தியால் குத்தப்பட்ட இந்திய விமானி ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு விமானத்தில் இருந்த 174 பேரின் உயிரைக் காப்பாற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Flydubai நிறுவனத்தின் FZ1073 என்ற விமானம் செப்டம்பர் 30ஆம் திகதி துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, காக்பிட் பகுதியில் இரு […]

Read More

கவிதை ஒரு மென்மையான மனதின் மொழி என்பது என் நீண்டகால நம்பிக்கை – உமாவரதராஜன்

எழுத்தாளர் சிவவரதராஜன் எழுதிய கடலலை மூடி வைத்த காலடிகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர் தமிழ் மணி உமாவரதராஜன் நிகழ்த்திய உரை உமா வரதராஜன் ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள் ‘ . என்ற தலைப்பில் எந்த கவிதையும் இத்தொகுப்பில் இல்லை. ஆனால் இந்தத் தொகுப்பின் ‘கடல் முற்றம்’ , ‘ஊர்க்குருவியின் பாடல்’, ‘சப்பாத்திக் கள்ளியும் பூக்கும்’, ‘பச்சோந்திக் காற்று’ ஆகிய கவிதைகளில் கடல் எட்டிப் பார்க்கிறது. . முக்கியமாக , அழியா ஓவியம் கவிதையின் […]

Read More

இன்று (01)சர்வதேசசிறுவர் தினம் ; வேரைப் பாதுகாத்தால்  மரம் செழிக்கும்; சிறுவரைப் பாதுகாத்தால்  தேசம் செழிக்கும் – கட்டுரை- வி.ரி.சகாதேவராஜா,

சர்வதேச சிறுவர் தினக் கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா, “கல்வியில்லா சிறுவன் வேரில்லா மரம்” போன்றவன். வேரைப் பாதுகாத்தால் தான் மரம் செழிக்கும். அதேபோல் சிறுவரைப் பாதுகாத்தால் தான் தேசம் செழிக்கும். ஆம், இது நிதர்சனமான உண்மை. இன்று 01.10.2026 இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் சிறுவர் தினம் வழமைபோல் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 1954ம் ஆண்டு சிறுவர் உரிமைகளை பாதுகாக்கவே இத்தினத்தை பிரகடனப்படுத்தியது. அதன்படி இவ் வருடம் 72 வது சர்வதேச சிறுவர் தினமாகும். ஒவ்வொரு வருடமும் […]

Read More

வீரமுனை மற்றும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் குறித்த வரலாற்று நூல் வெளியீடு

“பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயமும்” எனும் வரலாற்று ஆய்வு நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 04.10.2026 அன்று காலை 9.00 மணிக்கு வீரமுனை சுவிஸ் கிராண்ட் மஹாலில் நடைபெறவுள்ளது. கலாபூஷணம், ஆய்வார்வலர் நா. நவநாயகமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு திரு. அ. பிரதீபன் தலைமை தாங்கவுள்ளார். வீரமுனையின் பண்டைய வரலாறு மற்றும் அப்பகுதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் மற்றும் ஆய்வுத் தகவல்களை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது. நூல் […]

Read More

வாகரை குஞ்சர்குள மக்களுக்கு கனடா சாயி இல்லத்தால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குஞ்சர்குளம் கிராமத்தில் வசிக்கும் தேவை உடைய குடும்பங்களுக்கு கனடா சாயி இல்லம் அமைப்பினால் தலா 5,000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. கனடா சாயி இல்லத்தின் பிரதிநிதிகளான திருமதி ரவிச்சந்திரன் மற்றும் அவரது புதல்வர் ரவிச்சந்திரன் யாதவன் ஆகியோர் உலருணவுப் பொதிகளை கிராம மக்களுக்கு வழங்கி வைத்தனர். மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பேரவையின் தலைவர் சீ. யோகேஸ்வரன் கலந்து […]

Read More

ஆலையடிவேம்பில் ஆதரவற்ற இருவருக்கு சமூக சேவைப் பிரிவு மூலம் பாதுகாப்பு; முதியோர் நலனில் சிறப்பான நடவடிக்கை.

(செல்வி வினாயகமூர்த்தி) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் சமூக சேவைப் பிரிவினால், பிரதேசத்தில் ஆதரவற்ற நிலையில் காணப்பட்ட இரு முதியவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜின் வழிகாட்டலின் கீழ், சமூக சேவை பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் இ. சந்திரகுமார் உள்ளிட்ட சமூக சேவைப் பிரிவினரால் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, சிதம்பரப்பிள்ளை சரஸ்வதி என்பவர் உறவினரால் கைவிடப்பட்டதையடுத்து சமூகசேவை பிரிவினர் சட்ட ரீதியான […]

Read More

தேசிய உற்பத்தித்திறன் விருது விழா (NPA) கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 2-ஆம் இடம்!

​​சௌவியதாசன் தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் (National Productivity Awards – NPA 2025/26) போட்டியில், அரசுத் துறையின் (Public Sector) கீழ் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை (Base Hospital, Kalmunai North) தேசிய மட்டத்தில் 2-ஆம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. ​வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுணன் (Dr. G. Sukunan) அவர்களின் தலைமையில், வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையாலும், உழைப்பாலும் இந்த உயரிய விருது சாத்தியமாகியுள்ளது. ​பணிப்பாளரின் பாராட்டுச் செய்தி:இந்த மகத்தான […]

Read More

ஏர்பஸ் விவகாரம்: நாமலுக்கு நிபந்தனையுடன் பிணை

ஏர்பஸ் விவகாரத்துடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையின்போது, 500,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்க நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார். அதேவேளை, நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், […]

Read More