November 25, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

சம்மாந்துறையில் பால்குட பவனி!

வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை  ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு சடங்கு உற்சவத்தின்  பால்குடபவனியானது நேற்று சிறப்பாக இடம்பெற்றபோது… படங்கள்.வி.ரி. சகாதேவராஜா

Read More

கல்முனை பொது நூலகத்தில் மாணவர்களுக்கான வாசிப்புப் போட்டி

2026 ஒக்டோபர் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, கல்முனை பொது நூலகத்தினால் கல்முனை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வாசிப்புப் போட்டி நடத்தப்படவுள்ளது. இந்த வாசிப்புப் போட்டி இன்று 05.10.2026 அன்று காலை 10.00 மணிக்கு கல்முனை பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வுக்கு கல்முனை பொது நூலகத்தின் நூலகர் ஹரிஷா எம். ஏ. காதர் தலைமை தாங்கவுள்ளார். இதில் கல்முனை மாநகர சபை கணக்காளர் ஏ. எஸ். மனாசிர் பிரதம அதிதியாகவும், கலாபூஷணம் திரு. ஜே. டேவிட் விசேட அதிதியாகவும் […]

Read More

“எமக்கான சமூக நீதி எழட்டும்” எனும் தொனிப்பொருளில் கல்முனையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பு

பாறுக் ஷிஹான் தாதிய உதவியாளர்களின் ஆடைச் சர்ச்சை மற்றும் ஹரீஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குக் கடும் எதிர்ப்புஅரசியல் கடந்து உரிமைக்காகச் சிவில் அமைப்புகளுடன் கைகோர்க்கப் போவதாக முன்னாள் உறுப்பினர் ஏ.ஆர். அமீர் எச்சரிக்கை முஸ்லிம் சமூகத்திற்கு தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராகவும், சமூக உரிமைகளுக்காகவும் நியாயத்திற்காகவும் குரல் எழுப்பும் செயற்பாட்டாளர்களின் குரல்வளையை சட்ட நடவடிக்கைகள் மூலம் நசுக்கும் முயற்சிகளுக்கு எதிராகவும் கல்முனையில் பல்வேறு துறை சார்ந்த பிரதிநிதிகள் ஒன்றிணைந்து உரக்கக் குரல் எழுப்பியுள்ளனர். “எமக்கான சமூக நீதி […]

Read More

கல்முனை தலைமையக பொலிஸாரின் வருடாந்த அணிவகுப்புப் பரிசோதனைஅம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சி பங்கேற்பு

பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம் ஆண்டிற்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனை நிகழ்வும் கல்முனை உவெஸ்லி கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எல். லசந்த களுஆராச்சி தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் […]

Read More

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாவாக தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன் 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,750 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 815 ரூபாவாகவும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  

Read More

குருக்கள்மடம் தூய பிரான்சிஸ் அசீசியார் ஆலய வருடாந்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது

குருக்கள்மடம் தூய பிரான்சிஸ் அசீசியார் ஆலய வருடாந்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது 04-10-2026 (க. டினேஸ்) மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அமைந்துள்ள குருக்கள்மடம் தூய பிரான்சிஸ் அசீசியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி, இன்று 04.10.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு, பங்குத்தந்தை அருட்பணி ஹர்சதன் ரிச்சர்ட்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் பக்திபூர்வமாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்ற மாலை வழிபாடுகள், இறைமக்களை ஆன்மீக ரீதியாக தயார்படுத்தும் வகையில், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கருப்பொருள்களை மையப்படுத்தி […]

Read More

தான் கல்வி கற்ற அதே துறையில் விரிவுரையாளரான சம்மாந்துறை இளம் பெண்

தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறையைச் சேர்ந்த எஸ்.எல். பாத்திமா றுக்ஸானா, தான் மாணவியாக கல்வி கற்ற தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையிலேயே விரிவுரையாளராகப் பதவியேற்று, தனது கல்விப் பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சம்மாந்துறை அல் – மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யில் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த பாத்திமா றுக்ஸானா, 2016ஆம் ஆண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி, தகவல் தொழில்நுட்பத் துறையில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்துள்ளார். அதே […]

Read More

“கிழக்கின் கலைச்சங்கமம்” பண்பாட்டு பெருவிழா -2026

​ ​சௌவியதாசன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கல்முனை (S) பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் “கிழக்கின் கலைச்சங்கமம்” (EASTERN ART FUSION) கலை, கலாசார விழாவானது வரும் அக்டோபர் 06 முதல் 10 ஆம் திகதி வரை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. ​கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி. மேனகா புவிக்குமார் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வுகள் நாள்தோறும் பிற்பகல் 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை […]

Read More

“பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலமும்” நூல் வெளியீடு

(செல்வி வினாயகமூர்த்தி) அக்கரைப்பற்று பனங்காடு கலாபூஷணம், ஆய்வார்வலர் நா. நவநாயகமூர்த்தி எழுதிய “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலமும்” எனும் வரலாற்று ஆய்வு நூலின் வெளியீட்டு விழா இன்று (04.10.2026) ஞாயிற்றுக்கிழமை வீரமுனை சுவிஸ் கிராண்ட் மஹாலில் நடைபெற்றது. வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வீரமுனையின் பண்டைய வரலாறு மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலத்தின் வரலாற்றுப் பின்னணி, பண்பாடு மற்றும் ஆய்வுத் தகவல்களை உள்ளடக்கிய நூல் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை […]

Read More

அனோஜனின் மரண தண்டனையை குறைப்பதற்கான முயற்சி – சவுதி அரேபியாவுக்கு நாளை செல்லும் நான்கு பேர் கொண்ட குழு

கொழும்பு: கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மாற்றுவதற்கான முயற்சியின் ஒரு கட்டமாக, ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை (05) சவுதி அரேபியாவுக்குப் பயணமாகவுள்ளது. குறித்த குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சவுதி அரேபியாவைச் சென்றடையும் இக்குழுவினர், அங்குள்ள இரண்டு சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகளை எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சந்தித்து, அனோஜனின் தண்டனையை மாற்றுவது […]

Read More