November 24, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கோளாவில் அறுத்தநாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை உற்சவம்!

கோளாவில் அறுத்தநாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை உற்சவம்!


(செல்வி வினாயகமூர்த்தி)
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று கோளாவில் அருள்மிகு அறுத்தநாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின் கார்த்திகை உற்சவம் இன்று (24) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத் தலைவர் தா. தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்வுற்சவத்தில் கார்த்திகை தீபத்திருநாளில் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றன.

கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் இணையும் புனித நன்னாளில்
தமிழர்களின் தொன்மையான சைவ வழிபாட்டு மரபுகளில் ஒன்றான கார்த்திகை விளக்கீடு, இருளை அகற்றி ஒளியைப் போற்றும் ஆன்மீகத் திருநாளாக விளங்குகின்றது. இதனை முன்னிட்டு ஆலயங்களிலும் இல்லங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு இறைவழிபாடுகள் இடம்பெறுகின்றன.
அகல் விளக்கின் ஒளி, மனித மனத்தில் குடிகொண்டிருக்கும் அறியாமை எனும் இருளை அகற்றி ஞான ஒளியை ஏற்றுவதன் அடையாளமாகக் கருதப்படுகிறது.

மூதாதையர்கள் பேணிப் பாதுகாத்த இத்தொன்மையான சைவத் தமிழ் மரபை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லும் வகையில் கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *