November 24, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

அனோஜன் விவகாரம் இந்திய தூதுவர் மற்றும் அமெரிக்க தூதுவரை சந்தித்த தமிழரசுக் கட்சி எம். பிக்கள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கும் அனோஜனின் உயிரைக் காப்பாற்ற அவசர நடவடிக்கை – இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரியுடன் சந்திப்பு! சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜன் அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இன்று (23.09.2026) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் Anthony V. Pirnot ஆகியோரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களள் சந்தித்துக் கலந்துரையாடினர் அனோஜனின் விடுதலைக்காக மேற்கொள்ள வேண்டிய இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட முயற்சிகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசரத் தேவையை முன்னிறுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர் அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், அவரின் விடுதலைக்கான சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கவும் எமது நடவடிக்கைகள் தொடர்கின்றன. அனோஜனின் உயிரைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் தெரிவித்தார்

Read More

இலங்கை அரசு சவுதி அரசை நாடிய பின் இந்தியா தலையிட முடியும் மனோவிடம் இந்திய தூதுவர் தெரிவிப்பு!

அனோஜன் சிவராசா விவகாரத்தில், இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சவுதி அரசை நாடி, கோரிக்கை விடுத்த பின், இது தொடர்பில் இந்திய அரசு தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என இந்திய தூதர் சந்தோஷ்-ஜா தம்மை இன்று நேரடியாக சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்தார். அனோஜன் சிவராஜா தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பங்களிப்பை கோரி இன்று மாலை இந்திய தூதரை தமுகூ தூதுக்குழு சந்தித்தது. இதன் போது, மனோ […]

Read More

அக்கரைப்பற்று 10 வயது சிறுவனின் அசாத்திய படைப்பாற்றல்: இரு ஆங்கில நூல்கள் வெளியீடு: ஆசிரியர்கள், பொதுமக்கள் வியந்து பாராட்டு!

– கிரிஷாந் மகாதேவன் – அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது மாணவன் ரிஷாந்தன் அபிஷதன் ஆங்கிலத்தில் எழுதிய இரு நூல்கள் கடந்த (21) அன்று அவரது இல்லத்தில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டன. அக்கரைப்பற்று ‘பெபிள்ஸ் அகாடமி’யில் (Pebbles Academy) கல்வி பயின்று வரும் மாணவன் ரி.அபிஷதன், தனது பிறந்தநாளையொட்டி பெற்றோரின் ஒத்துழைப்புடன் இந்நூல்களை வெளியிட்டார். இந்நிகழ்வை ஆசிரியர்கள், கல்விச் சமூகத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாணவன் […]

Read More

சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை ;  கண்டறிந்து தருமாறு குடும்பத்தினர் கண்ணீர் வேண்டுகோள்

பாறுக் ஷிஹான் – தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான அமீர் அலி பாரிஸ் என்பவர் கடந்த சில மாதங்களாகக் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். வழமை போல் வேலைக்குச் சென்ற நிலையிலேயே இவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவரைப் பற்றி இதுவரை எவ்விதத் தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், அவரது மனைவியும் பிள்ளைகளும் சோகத்தில் மூழ்கியுள்ளதுடன் இவரைத் தீவிரமாகத் தேடி […]

Read More

அனோஜனின் விடுதலைக்காக அக்கரைப்பற்றில் ஒன்று கூடிய ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள்.

செல்வி வினாயகமூர்த்தி) – கிரிஷாந் மகாதேவன் – சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்த விசேட நிகழ்வொன்று அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற முன்றலில் இன்று (23) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட ஆலயங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அனோஜனின் விடுதலைக்காக ஒருமித்த குரல் எழுப்பினர். இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதிநிதிகள், மனிதாபிமான […]

Read More

மத்தியமுகாம் உஸ்வா அஹதிய்யா மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு மற்றும் கலாசார நிகழ்வு.

(மின்மினி மின்ஹா) அம்பாரை மாவட்டம் மத்தியமுகாம் பிரதேசத்தில் சிறப்பாக இயங்கிவரும் உஸ்வா அஹதிய்யா மாணவர்களின் வருடாந்த பரிகளிப்பு நிகழ்வு மற்றும் கலாசார நிகழ்வு மத்தியமுகாம் ஜீ.எம்.எம்.எஸ். பாடசுலை மண்டபத்தில் வெற்றிகரமாக (20) நடைபெற்றது. உஸ்வா அஹதிய்யா பாடசாலையின் அதிபர் – அஷ்- ஷெய் கு எம். எம். தெளபீக் (இஸ்லாஹி, BA, JP, DO) தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில் மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் , அவர்களின் திறமைகளை பராட்டும் வண்ணம் புரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றன. […]

Read More

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் நடந்த சோகம்!

ஆடை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்குண்டு பல்கலைக்கழக மாணவி பரிதாபப் பலி பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் 26 வயதுடைய திருமணமான மாணவி   உயிரிழந்துள்ளார். நிந்தவூர் 9 ஆம் பிரிவு மையவாடி வீதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீர் பிஸ்மி பாத்திமா என்ற மாணவியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார். தனது தந்தையுடன்   மோட்டார் சைக்கிளில் […]

Read More

அனோஜனின் மரண தண்டனையைக் குறைத்து, கருணை வழங்கவும்;கனடா-கல்முனை பிராந்திய இணையம் மனிதாபிமான வேண்டுகோள்-கனடாவிலிருந்து சவூதிக்கு நேரடி அஞ்சல் 

( வி.ரி.சகாதேவராஜா – சௌவியதாசன்) சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கல்முனை நற்பிட்டிமுனை தமிழ் இளைஞர் சிவராசா அனோஜனின் மரண தண்டனையைக் குறைத்து, கருணை வழங்க வேண்டும் எனகனடா கல்முனை பிராந்திய இணையம் மனிதாபிமான வேண்டுகோளை சவூதி மன்னருக்கு கனடா சவூதி தூதரகம் ஊடாக  விடுத்துள்ளது. கனடா கல்முனை பிராந்திய இணைய தலைவர் விசு கணபதிப்பிள்ளை, செயலாளர் பத்மநாதன்,பிரதான ஒருங்கிணை;ப்பாளர் நோ.விஜயரெட்ணம் ஆகியோர் இந்த அஞ்சலை இணையம் சார்பாக அனுப்பி வைத்துள்ளார்கள் அதன் முழு விபரம் இதோ.. அஞ்சல்  […]

Read More

ஒக்டோபர் 03ல் ஆலையடிவேம்பில் கவியரங்கு; ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்.

(செல்வி வினாயகமூர்த்தி) ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார அதிகாரசபையின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஒக்டோபர் 03ம்திகதி நடைபெறவுள்ள கவியரங்கிற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (22) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச நெசவு நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஓய்வூதியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கலாசார அதிகாரசபையின் பொதுக்கூட்டத்தின் போதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. கலாசார அதிகாரசபையின் உப தலைவர் வா. குணாளன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, ஒக்டோபர் முற்பகுதியில் நடைபெறவுள்ள கவியரங்கை சிறப்பாக முன்னெடுப்பதற்கான […]

Read More

சம்மாந்துறை போக்குவரத்து பொறுப்பதிகாரிக்கு பிரியாவிடை

தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஏ.டி.ஆர். விஜேவர்த்ன தற்காலிக இடமாற்றம் பெற்று செல்லவுள்ளதை முன்னிட்டு, அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (22) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப்குமார தலைமையில் நடைபெற்றது. இதன் போது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப்குமார கருத்து தெரிவிக்கையில் “சம்மாந்துறையில் கடமையாற்றிய காலப்பகுதியில், வீதி ஒழுங்குகளைப் பேணுதல், போக்குவரத்து […]

Read More