November 11, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய ஆசிரியர் கலைஞர் ஏ. ஓ. அனல் மாகாண மட்டத்தில் முதலிடம்.

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய ஆசிரியர் கலைஞர் ஏ. ஓ. அனல் மாகாண மட்டத்தில் முதலிடம்.

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு வருடந்தோறும் நடாத்துகின்ற கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான “பிரதீபா” அகில இலங்கை சித்திரப் போட்டியில் பங்குபற்றிய மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் சித்திர பாட ஆசிரியராக சேவையாற்றும் கலைஞர்.ஏஓ.அனல் (வி.ஜீவராசா) மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நாட்டிலுள்ள பல்வேறு கலாசார மத்திய நிலையங்களில் நேரடியாக நடைபெற்ற போட்டியில் பங்கு பற்றி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
இவர் 2024, 2025 ஆம் ஆண்டுகளில் மாகாண மட்டத்தில் மூன்றாமிடத்தையும்,, 2026 ஆம் ஆண்டு மாகாண மட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

மாகாண மட்டத்தில் நடைபெற்ற பிரதீபா அகில இலங்கை சித்திரப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்கான தேசிய மட்ட போட்டியானது அண்மையில் கொழும்பு ஹடவத்த மஹர ஜனாதிபதி வித்தியாலயத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *