November 11, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > மாலையில் வெளியே சென்றவர் காலையில் சடலமாக மீட்பு !கோமாரியில் மர்ம  சம்பவம் 

மாலையில் வெளியே சென்றவர் காலையில் சடலமாக மீட்பு !கோமாரியில் மர்ம  சம்பவம் 

மாலையில் வெளியே சென்றவர் காலையில் சடலமாக மீட்பு !கோமாரியில் மர்ம  சம்பவம் 

( வி.ரி. சகாதேவராஜா)

வயல் காவலுக்காக செல்ல வேண்டும் சாப்பாட்டை கட்டி வையுங்கள்  என்று தாயாரிடம் சொல்லிவிட்டு மாலையில் வெளியேறிச் சென்றவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் பொத்துவில் பொலீஸ் பிரிவிலுள்ள கோமாரி எனும் கிராமத்தில் இன்று (10) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கோமாரியைச் சேர்ந்த 34 வயதுடைய யோகராசா மதன் எனும் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

அம்பிளாந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கோமாரியில் திருமணம் முடித்து விவசாயம் செய்து வந்தவர் . அவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கின்ற ஒரு பிள்ளை இருக்கிறது. மனைவி வெளிநாட்டில் வேலை நிமித்தம் சென்றிருந்தார்.

நேற்று  திங்கட்கிழமை மாலை தனது தாயாரிடம் வயல் காவலுக்காக செல்ல வேண்டும் சோறு கட்டி வையுங்கள் என்று கூறி விட்டு வெளியே சென்றவரை காணவில்லை .

மறுநாள் இன்று(10) செவ்வாய்க்கிழமை காலையில் கழுகொல்லை எனும் இடத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

 பொத்துவில் போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அவர் எவ்வாறு  மரணமடைந்தார் என்பது இதுவரைக்கும் மர்மமாக இருக்கின்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *