கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் 2026ஆம் ஆண்டுக்கான ஒன்று கூடலும் கௌரவிப்பு நிகழ்வும் SLR மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அறக்கட்டளையின் தற்போதைய தலைவர் அதிபர் திரு. கே. கமலநாதன் அவர்களின் தலைமையிலும், செயலாளர் திருமதி வதனா நிமோஜன் பொருளாளர் திரு. டி. நவநீதன் ஆகியோர் முன்னிலையிலும் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
இந்நிகழ்வுக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் பிரதம அதிதியாகவும், பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திரு. சந்திரகுமார் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் கடந்த ஆண்டு அமைப்பை சிறப்பாக வழிநடாத்திய நிருவாக சபை உறுப்பினர்களான முன்னாள் தலைவர் திரு. ஜே. ஜே. பிரகாஷ், முன்னாள் செயலாளர் திரு. எஸ். ஸ்ரீகரன் மற்றும் பொருளாளர் திரு. டி. நவநீதன் ஆகியோரின் கடந்த கால சேவைகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
ஆசிரியர்கள் கௌரவிப்பு:
90களில் கார்மேல் பற்றிமா கல்லூரியில் கற்பித்த ஆசிரியர்களான திரு. ஆர். சுகிந்தராஜன், திரு. கன. வரதராஜன், திரு. கே. ஞானரத்தினம், திரு. கே. கிருபராஜா, திரு. எஸ். ராஜேந்திரா, திருமதி பு. ராதா மற்றும் திருமதி ஆ. மெய்யழகன் ஆகியோரும் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த ஒன்று கூடலில் அறக்கட்டளையின் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் பங்கேற்றனர். மேலும், மாணவர்களின் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனை{ ஸ்ரீ நர்த்தனாலயா கலை மன்றம் பாண்டிருப்பு-2 திருமதி N. நிர்மலா தம்பிராஜாவின் மாணவிகள்) வழங்கியிருந்தனர்.
; இவ் அமைப்பினால் மாதாந்தம் வழங்கப்படும் கல்வி உதவி தொகையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.




