November 8, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

இருளை அகற்றி ஒளியை ஏற்றி வைக்கும் இந்து மக்களின் உன்னதமான சமய விழாவான தீபாவளித் திருநாளை முன்னிட்டு எனது நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

கிருஷ்ண பகவான், நரகாசுரன் எனும் அசுரனை வதம் செய்தமையை நினைவுகூர்ந்து, அதர்மத்தை வென்று தர்மம் நிலைநாட்டப்பட்டதைப் போன்று அனைவரதும் மனங்களிலுள்ள இருள் அகன்று ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்துக்கள் சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.

தீபாவளி பண்டிகையின் உண்மையான அர்த்தம் என்பது வெறும் வீடுகளை விளக்குகளால் ஒளிரச் செய்வதற்கு அப்பால் சென்று, மனித இதயங்களில் அன்பு, கருணை, சகோதரத்துவம் மற்றும் மானுடப் பண்புகளின் ஒளியை ஏற்றி வைப்பதாகும். எனவே, வெறுப்பிற்குப் பதிலாக கருணையையும், பிளவுகளுக்குப் பதிலாக நல்லிணக்கத்தையும், அநீதிக்குப் பதிலாக நீதியையும் தேர்ந்தெடுத்து, மேலும் சிறப்பான, நியாயமான மற்றும் பரிவுமிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியை புதுப்பித்துக் கொள்வதற்கு தீபாவளிப் பண்டிகை ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றது.

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தி, அனைத்து சமய மற்றும் கலாசார அடையாளங்களையும் மதிக்கும், அனைவரையும் சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் நடத்தும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் உயரிய பொறுப்பிற்காக நாம் தற்போது உறுதியுடன் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மீண்டும் வலுப்பெற்று, உலகிற்கு முன்னால் கௌரவத்துடன் நிமிர்ந்து நிற்கும் “அமைதி மற்றும் மனிதநேயத்தின் நாடாக” இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக நாம் ஒன்றாகப் பயணிக்கும் இந்தப் பாதையானது, இந்த தீபாவளி நாளில் ஏற்றப்படும் தீபங்களின் ஒளியால் மேலும் ஒளிரட்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.

இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் இந்து பக்தர்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, சௌபாக்கியம் நிறைந்த  மனப்பூர்வமான இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். 

அநுர குமார திசாநாயக்க,ஜனாதிபதி 

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு,2026 நவம்பர் 08

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *