கல்முனை நெற் கடந்த பத்து வருடங்களை தாண்டிய பயணம் தனியாக செய்திச் சேவைகளோடு மாத்திரம் நின்றுவிடாது இப்பிராந்தியத்தில் பல ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் செய்துவருகின்றது. இப்பிரதேச முக்கிய நிறுவனங்களுடனும் அதன் தலைமைகளுடனும் சமூக நலன் சார்ந்து வலுவான உறவை பேணிவருகின்றதன் அடிப்படையில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிபர் அருட்தந்தை வண.லெபோன் சுதன் அவர்களை கல்முனை நெற் குழுமம் சந்தித்தது கலந்துரையாடியது.

