November 7, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > அம்பாறை உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

அம்பாறை உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் 22 மாவட்டங்களில் இன்று (07) இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்போது பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்தினால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதுடன், மின்சாதனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளும் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் வெளிப்புற விளையாட்டுகள், கட்டுமானப் பணிகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் பொதுநிகழ்வுகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பான கட்டடங்களுக்குள் அல்லது மூடப்பட்ட வாகனங்களுக்குள் இருக்குமாறும், தனி மரங்களின் கீழ் தஞ்சமடைவதையும், நீர்நிலைகள் மற்றும் கடற்கரைகளுக்குச் செல்வதையும் தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

கல்முனை நெற் | செய்தி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *