சௌவியதாசன்
கல்முனை மாநகர சபையின் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலும், மாநகர சபையின் வருமான மூலங்களை மேம்படுத்தக்கூடிய வகையிலும், வரவு செலவுத் திட்டத்தைப் பாதீடாக வினைத்திறனாகத் தயாரிக்கும் நோக்கில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொதுமக்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளின் காத்திரமான முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்வதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக, இது தொடர்பான கலந்தாலோசனை மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், சமூகமட்ட அமைப்புகள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் வழங்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
திகதி: 05.11.2026
இடம்: கல்முனை மாநகர சபையின் கூட்ட மண்டபம்
நேரம்: மு.ப 10.00 மணி
மாநகர சபையின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளிலும், வரவு செலவுத் திட்ட தயாரிப்பிலும் பங்குபற்ற விரும்பும் அனைத்து ஆர்வலர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.