மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளராக வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் இன்று கடமையேற்றார்
இவருக்கான நியமனக் கடிதம் சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் கடந்த (2) திங்கள் கிழமை சுகாதார அமைச்சில் வைத்து வழங்கப்பட்டது .
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நிரந்தர பணிப்பாளர் நியமிக்கும்வரை பதில் பணிப்பாளராக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரார் மருத்துவர் இரா.முரளீஸ்வரன், நான்கு மாதங்கள் பதில் கடமையாற்றி இருந்தார்.
சுகாதார நிருவாக சேவையில் 15வருட காலம் அனுபவமுள்ள மருத்துவர் குண.சுகுணன் முதலில் களவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக, மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளராக, வவுனியா ஆதார வைத்தியசாலை பணிப்பாளராக, இறுதியாக கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த மருத்துவர் குண.சுகுணன் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்று, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப் படிப்பை பூர்த்தி செய்து , பட்டப் பின் நிருவாக முதுமாணிப் பட்டத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்தவராவார்.