( வி.ரி.சகாதேவராஜா)
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/26 இல் பொதுத்துறை பிரிவில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்த கல்முனை ஆதார வைத்தியசாலையின் சாதனையை பாராட்டிக் கௌரவிக்கும் விழா, வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் ஜி.சுகுணன் தலைமையில் (03) செவ்வாய்க்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலைக் குழு இணைந்து இவ்விழாவினை ஏற்பாடு செய்திருந்தது.
முன்னதாக அதிதிகள் பிரதான நுழைவாயிலில் இருந்து பான்ட் வாத்தியம் சகிதம் மாலை சூட்டி வரவேற்கப்பட்டனர் .
பின்னர் அங்கு வைத்தியசாலையின் புதிய உடற்பயிற்சி பிரிவு நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
அதனையடுத்து பிரதான மண்டபத்தில் பாராட்டு நிகழ்வு வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் ஜி.சுகுணன் தலைமையில் ஆரம்பமானது.
பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் பி.சிறிசங்கர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்து சிறப்பித்த அதேவேளை,
விசேட அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுகாதார விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் கலந்து சிறப்பித்தார்.
மேலும் கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திருமதி ஷகிலா இஸ்ஸதீன் , கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் டி. ஜே. அதிசயராஜ்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் மருத்துவர் திருமதி தாகிரா சபியுடீன், கல்முனை கார்மேல் பற்றிமா அதிபர் வண.பிதா.லெபோன் சுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய விருதைப் பெறுவதற்கு மூலவிசையாக இயங்கிய வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் ஜி.சுகுணன், வைத்தியசாலை குழுவினரால் பொன்னாடை போர்த்தி விசேட நினைவு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதனை விட உற்பத்தி திறன் விருதுக்காக உழைத்த பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் பி.சிறிசங்கர், மருத்துவர்களான எஸ்.ராகுலன், என் .ரமேஷ்,வி.பேரின்பரூபன், கணக்காளர் நஷிமுல் ஹக்,தாதிய உத்தியோகத்தர்களான என்.சசிதரன்( பரிபாலகர்),பி.செல்வகுமார், எஸ்.ஜெயசாந்தி, டி.டில்ருக்ஷி, நிருவாக உத்தியோகத்தர் ரி.தேவஅருள் என பத்து பேர் பாராட்டப்பட்டனர்.
வைத்தியசாலையிலுள்ள 44 பிரிவுகளிடையே மேற்கொண்ட உள்ளக மதிப்பீட்டில் முதலிடத்தை விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பெற்றுக் கொண்டது.
இரண்டாவது இடத்தை கணக்கு பகுதியும், மூன்றாவது இடத்தை பிரதான சத்திரகிசிச்சை கூடமும் பெற்றுக் கொண்டன .
இவற்றுக்கான விசேட விருதுகள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் 13 தெரிவுசெய்யப்பட்ட பிரிவுகளுக்கு விசேட விருதுகள் வழங்கப்பட்டன.
இதனை விட அதிதிகளும்,வைத்தியசாலை குழுவின் தவிசாளர் சந்திரசேகரன் ராஜன், பிரதித் தவிசாளர் வி.ரி.சகாதேவராஜா, செயலாளர் மருத்துவர் எஸ்.ராகுலன், பொருளாளர் இ.ரூபசாந்தன் மற்றும் உறுப்பினர்களான எஸ். சுரேஷ், எஸ். சதீஸ்குமார், ஏ. கதிரமலை, எல். லெட்சுமிகாந்தன், , க. பிரகலாதன், திருமதி. என். நிமோஜனா, க. சிவலிங்கம் ஆகியோரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வைத்தியசாலை குழுவின் பிரதித் தவிசாளர் வி.ரி.சகாதேவராஜா நன்றியுரையாற்றினார்.
சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த நிகழ்வில் வைத்தியசாலை நிருவாகிகள் ஊழியர்கள், வைத்தியசாலைக் குழு உறுப்பினர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை நெற் ஊடக வலையமைப்பு இந்த நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பியிருந்தது.


























