NSN நிறுவன பொறுப்பாளர் திரு .R. ஜெயசீலன் அவர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட ‘அறம் ” உணவகம் இன்று ( 04.11.2026), ஆலையடிவேம்பு பிரதேச சபை கட்டிடத்தில் திருமதி. நடராஜா சுமந்தி, P. ஹேமலதா , K. சஜினி மற்றும் T. தர்மினி ( NSN நிறுவன உறுப்பினர்கள்) ஆகியோரின் மூலமாக கோலாலமாக திறந்து வைக்கப்பட்டது .
இந்த நிகழ்வில் செல்வி. நிவேதிதா, மற்றும் திரு. ஹேமதர்ஷன் அவர்களும் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பாதிப்புற்ற மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பெண்களை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களின், திறமைகளை முன்னுக்கு கொண்டு வருவதற்காகவும் இந்த ஏற்பாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.







