November 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அம்பாறை மாவட்ட பெண்கள் அபிவிருத்தி ஒன்றியத்தினர் அரசாங்க அதிபரைச் சந்தித்தனர்

அம்பாறை மாவட்ட பெண்கள் அபிவிருத்தி ஒன்றியத்தினர் அரசாங்க அதிபரைச் சந்தித்தனர்

(செல்வி வினாயகமூர்த்தி)

அம்பாறை மாவட்ட பெண்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் பிரதிநிதிகள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சியை நேற்று (03) செவ்வாய்க்கிழமை அம்பாறை கச்சேரியில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

ஒன்றியத்தின் தலைவி U.S.M. ஹபீசா தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, அரசாங்க அதிபருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் A.L.I. இஃதிஹார் பானுஷா, ஒன்றியத்தின் ஆலோசகர்களான வாணி சைமன், சித்திரா தேவராஜன், S.M. மர்லியா, சட்டத்தரணி AGM ஜக்ஹீபர், திருமதி ரூபியா ஜக்ஹீபர், அக்கரைப்பற்று பிரதேச சபையின் உதவித் தவிசாளர் M.H. சுபைதா மற்றும் பிரதேச சபை உறுப்பினர் M.H. பைரூஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் காணி விவகாரங்கள் மற்றும் கரும்புச்சேனைப் பிரச்சினை தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்குத் தீர்வு காண்பது தொடர்பான கோரிக்கைகளும் அரசாங்க அதிபரிடம் முன்வைக்கப்பட்டன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *