November 3, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மியன்மார் இந்து முன்னணி பாராட்டு!

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மியன்மார் இந்து முன்னணி பாராட்டு!

Newswire

சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து செய்யப்படுவதற்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மியன்மார் இந்து முன்னணி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர மற்றும் மனிதாபிமான முயற்சிகளைப் பாராட்டி, ஜனாதிபதிக்கு முகவரியிடப்பட்ட பாராட்டுக் கடிதம் மற்றும் தீபாவளிப் பரிசுப் பொதியொன்றையும் குறித்த அமைப்பு வழங்கியுள்ளது.

குறித்த கடிதமும் பரிசுப் பொதியும் ஒக்டோபர் 21ஆம் திகதி யங்கூனில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் வைத்து, மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பிரபாஷினி பொன்னம்பெருமவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் மியன்மார் இந்து முன்னணியின் பொதுச் செயலாளர் கியாவ் நைங் ஓ, புரவலர்களான கியி சோ மற்றும் கியாவ் மின், தலைவர் நைங் வின் துன் மற்றும் பொறுப்பதிகாரிகளான தன் தன் சோ, மோன் மோன் சான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்வதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகளைப் பிரதிநிதிகள் பாராட்டினர்.

அத்துடன், மதம் மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்து, மனிதாபிமானம், கருணை மற்றும் ஒற்றுமை ஆகிய விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, மியன்மார் சமூகத்தினரால் வெளிப்படுத்தப்பட்ட இந்த நல்லெண்ணத்திற்கும் இலங்கை மீதான ஆதரவிற்கும் யங்கூனிலுள்ள இலங்கைத் தூதரகம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *