க.டினேஸ்
அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் சேமக்காலை வளாகத்தில், இறைவனில் இளைப்பாறிய ஆன்மாக்களின் நித்திய இளைப்பாற்றிக்காக இன்று (02.11.2026) சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இத்திருப்பலியை சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அடிகளார் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இதன்போது, இறந்தவர்களின் உறவினர்கள் தங்களது அன்புக்குரியவர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, தீபங்களை ஏற்றி, இறந்தவர்களை அன்புடனும் நன்றியுடனும் நினைவுகூர்ந்து இறைவேண்டுதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து கல்லறைகள் ஆசீர்வதிக்கப்பட்டு, இறந்த ஆன்மாக்களுக்காகச் சிறப்பாக மன்றாடப்பட்டது.
இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த கத்தோலிக்க மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு, இறந்த ஆன்மாக்களின் நித்திய இளைப்பாற்றிக்காக உருக்கமாக வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இறைவனில் இளைப்பாறிய அனைத்து ஆன்மாக்களும் இறைவனின் பேரிரக்கத்தில் நித்திய இளைப்பாற்றியைப் பெற்றிட மன்றாடுவோம்.
புகைப்பட்ங்களை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும்