கலபொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக. உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று (25) மாலை, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளுடன் இணைந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை அறிவித்தார்.
பௌத்தத்தின் மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள், ஞானசார தேரரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து தலையிட்டு செயற்படுவதாக எழுத்துமூலமாக அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் . உலபனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.
