October 23, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கிழக்கு மாகாண கலாசார விருதுகள் பட்டியல் வெளியானது -51 கலைஞர்களுக்கு விருதுகள் 

கிழக்கு மாகாண கலாசார விருதுகள் பட்டியல் வெளியானது -51 கலைஞர்களுக்கு விருதுகள் 

( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2026 ஆம் ஆண்டுக்கான கலாசார விருதுகளை அறிவித்துள்ளது.

 கிழக்கு மாகாணப் பணிப்பாளர் திருமதி. பு. மேனகா அவர்களினால்  தமிழ் மொழி பிரிவின்கீழ் மொத்தம் 41 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சிங்கள மொழி பிரிவில் 10 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கிழக்கு மாகாண நற்பரிசுக்காக 11 சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இலக்கியம், ஆற்றுகை மற்றும் பல்துறைகளைச் சேர்ந்த நூல்களுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இளங்கலைஞர் விருதுக்கு 17 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இலக்கியத் துறையில் மூதூரைச் சேர்ந்த திருமதி முகம்மது சியா பாத்திமா ரொஷானா, ஏறாவூர்ப்பற்றைச் சேர்ந்த திரு. கனகரெத்தினம் சிவதர்சன், ஆரையம்பதியைச் சேர்ந்த திரு. கிருஷ்ணப்பிள்ளை ரவீந்திரன், காரைதீவைச் சேர்ந்த ஜனாபா உம்மு மஜீனா, கல்முனையைச் சேர்ந்த பாத்திமா சுமைய்யா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 ஆற்றுகைப் பிரிவில் விஜயதனி ஜெகதீஸ்வரன், தர்மிகா ஜெயதீஸ், முருகேசு அருணன், முகம்மட் அஸ்மின், ஆரணிகா நவமணி ஆகியோர் விருது பெறுகின்றனர்.

 மேலும் பல்துறை, ஊடகம், நுண்கலை மற்றும் குறும்படத் துறைகளில் ஜெயராம் யுதிஷ்டன், ஹஸன் குத்தூஸ், அப்துல் ஹலீம் ஹரஸ்பர், அகமட் லெப்பை நயீம், இரத்தினசிங்கம் கிருஷ்ணா, புத்திசிகாமணி சிறிகரன் மற்றும் கீர்த்திசீலன் கிஷாந் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மூத்த கலைஞர்களை கௌரவிக்கும் வித்தகர் விருதுக்கு 13 பேர் தெரிவாகியுள்ளனர். 

இலக்கியத் துறையில் முகம்மது முகைதீன் அப்துல் அனஸ், செய்னுலாப்தீன் நஸீரா, ஹெட்டி ஆராச்சி மெத்தியேஸ், சீனித்தம்பி ஜலால்தீன், சம்சுதீன் தஸ்தகீர் ஆகியோரும், ஆற்றுகைத் துறையில் கலாநிதிகள் அழகையா விமலராஜ், பிரியதர்ஷினி ஜெதீஸ்வரன், சின்னராசா காண்டீபன், நாகூர்பிச்சை அப்துல் மஜீத் ஆகியோரும், பல்துறை மற்றும் ஊடகம், நாட்டாரியல் துறைகளில் பொன்னையா செல்வநாயகம், முகம்மது அலியார் ரசாக், பொன்னுத்துரை சற்சிவானந்தம் மற்றும் அபூபக்கர் இஸ்ஸதீன் ஆகியோரும் விருதுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

விருது பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் பேரவை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *