October 23, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > ஆலையடிவேம்பில் அறநெறிப் பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

ஆலையடிவேம்பில் அறநெறிப் பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

​

​(சௌவியதாசன் – ஜே.கே.யதுர்ஷன்)

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் நற்பண்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் முகமாகத் தள பாடங்கள் (கற்றல் உபகரணங்கள்) வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(21) இடம்பெற்றது.


​இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு. இ. திரவியராஜ் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
​இதன்போது, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இயங்கி வரும் இராமகிருஷ்ணா அறநெறிப் பாடசாலை மற்றும் கண்ணகி அறநெறிப் பாடசாலை ஆகியவற்றுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் குறித்த தள பாடங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.


​இந்நிகழ்வில் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு. கு. ஜெயராஜி, பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி சர்மிளா பிரசாந், ஆலய தர்மகர்த்தாக்கள், அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


​

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *