கே.எஸ்.கிலசன்
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவின் கலைஞர்கள் பங்கேற்ற சுவாரசியமான சிந்தனைப் போர்க்களம் “மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் சொத்துக்களா? சொந்தங்களா?”
எனும் தலைப்பில் நடைபெற்றது.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் தலைமையில் கலாசார உத்தியோகத்தர் திருமதி. எம்.எச். பௌசுல் ஹிபானா அவர்களது ஏற்பாட்டிலே நடைபெற்ற இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேசத்திற்குட்பட்ட கலைஞர்கள் பட்டிமன்ற பேச்சாளர்களாக கலந்துகொண்டிருந்தனர்.
சொத்துக்கள் என்ற தலைப்பில் கலைஞர்களான சண்முகம் குமாரராசா, மதிவண்ணன் முகர்ணியா, அப்துல் வஹாப் பாத்திமா மிஸ்னா, கேதீஸ்வரன் கோவர்த்தனா, கோவிந்தப்பிள்ளை விஜயராசா ஆகியோரும், சொந்தங்கள் என்ற தலைப்பில் தௌபிக் மௌலவி, முத்துலிங்கம் ஜெயசுந்தரம், ஆதம்பாவா பாத்திமா சஸ்னி, அருள்நாயகம் ரிஷிபவான், ஆதம்பாவா பாத்திமா ஹலால் ஆகிய 10 பேச்சாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். இப்பட்டிமன்றத்தின் நடுவர்களாக கலைஞர்களான ஜனாப். இம்தியாஸ் கபீர் மற்றும் திரு. கு.குமாரதாசன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இரு தரப்பினரும் தமது சிறப்பான வாதங்களை முன்வைத்திருந்த போதிலும் “மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் சொந்தங்களே” எனும் அணியினர் வெற்றி பெற்றிருந்தனர்.










