October 23, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை வடக்கு பிரிவில் – நடனக்கலைஞர் ஆரணிகா நவணிணிக்கு இளங்கலைஞர் விருது.

கல்முனை வடக்கு பிரிவில் – நடனக்கலைஞர் ஆரணிகா நவணிணிக்கு இளங்கலைஞர் விருது.

கே.எஸ்.கிலசன்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வருடந்தோறும் நடைபெறும் விருத வழங்கல் விழாவில் விருதுக்கு தேர்வானோரின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இம்முறை விரு பெறுவோரில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சார்பில் ஆற்றுகை துறைக்காக இளங்கலைஞர் விருதுக்கு தெரிவாகியுள்ளார் நடனக்கலைஞர் செல்வி ஆரணிகா நவமணி அவர்கள்.

கல்முனையை சேர்ந்த இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடனத்துறையில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பின்னரும் நடனத்துறை மீதான காதலால் உயர்படிப்பை தொடர்வதற்காக இந்தியா சென்று கற்று வருகிறார். இவரது தந்தையார் நவமணி அவர்களும் மிகச்சிறந்த கலைஞராக கல்முனை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர். அவரது வழித்தொடராக மகளும் தற்போது இளங்கலைஞராக அரச அங்கீகாரம் பெறுவது அவரது கலைப்பயணத்திற்கு வலுச்சேர்க்கும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *