( வி.ரி.சகாதேவராஜா)
சர்வதேச முதியோர் தின விழாவையொட்டி காரைதீவு மக்கள் வங்கி முகாமையாளர் திரு.உமாசங்கரன் தலைமையில் முதியோர் தின விழா இன்று (01) வியாழக்கிழமை நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் சிறந்த முதியோர் சங்கமாக தெரிவு செய்யப்பட்ட காரைதீவு கண்ணகி முதியோர் சங்கத்தின் தலைவர் த.சிவானந்தராஜா, பொருளாளர் த.வசந்தமலர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
சிறப்பு அதிதியாக ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.



