September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் கல்விப் பயணத்தில் மேலும் ஒரு சாதனை!

வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் கல்விப் பயணத்தில் மேலும் ஒரு சாதனை!

வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் கல்விப் பயணத்தில் மேலும் ஒரு சாதனை!

க. டினேஸ்

வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம், இம்முறை நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேற்றைப் பதிவு செய்து கல்வித்துறையில் மேலும் ஒரு சாதனையை நிலைநாட்டியுள்ளது.

பாடசாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 43 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100 சதவீத சித்தியை பெற்றுள்ளனர். இதேவேளை, அவர்களில் 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மாணவர்களின் இந்த வெற்றிக்கு பாடசாலை அதிபர் திருமதி கௌ. கணேஸ்வரன், தரம் 05 பொறுப்பாசிரியர் திரு. ப. றசிகரன், ஆசிரியை திருமதி அ. வசந்தகுமார், ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

அத்துடன், மாணவர்களுக்கான விசேட வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினருக்கும் பாடசாலை நிர்வாகம் நன்றியைத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2026.09.07 அன்று காலை ஆராதனையின்போது, பாடசாலை அதிபர் திருமதி கௌ. கணேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் திரு. பூ. பரமதயாளன் – பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி மற்றும் பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர்) கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி கௌரவித்தார்.

மேலும், நிகழ்விற்கு அனுசரணையும் ஒத்துழைப்பும் வழங்கிய வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் ஆகியோருக்கும் பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் நிர்வாகம் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் இந்தச் சிறப்பான பெறுபேறு, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக அமைந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *