அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து: மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்
மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட மின்கசிவே காரணம் பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்புப் பிரிவினரின் விரைவான நடவடிக்கையினால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதான வீதி, லங்கா ஸ்டோருக்கு அருகாமையில் இயங்கி வரும் ‘LU LU’ நிறுவனத்தின் மின் பிறப்பாக்கியில் (Generator) ஏற்பட்ட மின் ஒழுக்கு (மின்கசிவு) காரணமாகவே அதன் மேல்தளத்தில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. […]