September 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > விநாயக சதுர்த்தியை முன்னிட்டு நாளை மட்டக்களப்பு – அம்பாறை பக்தர்கள் இணையும் மாபெரும் புனித பாதயாத்திரை

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு நாளை மட்டக்களப்பு – அம்பாறை பக்தர்கள் இணையும் மாபெரும் புனித பாதயாத்திரை

(செல்வி வினாயகமூர்த்தி)

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு முதல் அம்பாறை வரையிலான பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்கும் மாபெரும் புனித பாதயாத்திரை நாளை 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்பாதயாத்திரை, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

மட்டக்களப்பு, திருக்கோவில், ஆலையடிவேம்பு, காரைதீவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றிணைந்து இப்புனித பாதயாத்திரையில் கலந்துகொள்ளவுள்ளனர்.

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும் பாதயாத்திரை, சேனைக்குடியிருப்பு, சவளக்கடை, மல்வத்தை மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளின் ஊடாகப் பயணித்து, இறுதியாக அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தைச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதயாத்திரையில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அனைவரும் அதிகாலை 4.30 மணிக்கு முன்னதாக கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்தில் ஒன்று கூடுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனிடையே, பாதயாத்திரையின் ஆரம்ப இடமான கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்தைச் சென்றடைவதற்கு வசதியாக அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்த விரும்பும் பக்தர்கள் அதிகாலை 4.00 மணியளவில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

திருக்கோவில் பகுதியில் இருந்து இப்புனித பாதயாத்திரையில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் கண. இராசரெத்தினம் (கண்ணன்) அவர்களை 077 377 9119 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையில் கலந்துகொள்வதற்கான வாகன ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதயாத்திரை நிறைவடைந்த பின்னர் மீண்டும் அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பக்தர்களை அவர்களது உரிய இடங்களுக்கு மீண்டும் அழைத்துச் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அன்று 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்களுக்காக மாலை 4.30 மணிக்கு அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்திலிருந்து வாகனம் புறப்படுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *