September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > ஆலையடிவேம்பில் இந்திய – இலங்கைப் முதலீட்டாளர்களின் சந்திப்பு.

ஆலையடிவேம்பில் இந்திய – இலங்கைப் முதலீட்டாளர்களின் சந்திப்பு.

(செல்வி வினாயகமூர்த்தி)

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து, அவர்களின் தொழில் முயற்சிகளை மேம்படுத்தும் நோக்கில் “இந்திய – இலங்கைப் பெரும் முதலீட்டாளர்களின் சந்திப்பு” செப்டெம்பர் 18, 2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் இந்து இளைஞர் மன்றக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்து இளைஞர் மன்றத் தலைவர் இறைபணிச்செம்மல் திரு. த. கயிலாயப்பிள்ளை (JP) தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் திரு. R. திரவியராஜ் மற்றும் ஆலயடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் திரு. A. தர்மதாசா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும்,அக்கரைப்பற்று உப பொலிஸ் அத்தியட்சகர் N.P நுவான் தந்த நாராயண திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன், திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் S.சசிக்குமார் மற்றும் இந்திய இலங்கை வர்த்தக ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் அசோகா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வி அதிகாரிகள், மற்றும் திருக்கோவில் ,ஆலையடிவேம்பு வர்த்தகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாகப் பங்கேற்கவுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *