October 1, 2026

Blog Post

Kalmunai Net > 2026

பெரியநீலாவணையில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் ‘அத்தம’ தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம்; பிரதி அமைச்சர் வசந்த பீரிஸ் பங்கேற்பு

 (அலானி எம் நியாஸ், ஷனா)  அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவில், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் “தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘அத்தம’ தேசிய வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று (19) பெரியநீலாவணையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ,  தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து  பெரியநீலாவணை மயானத்தை அண்டிய பகுதிகளில் சிரமதான பணிகளில்ல் ஈடுபட்டு, குறித்த பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டதுடன்    .நீண்டகாலமாக வடிகான்களில் தேங்கிக் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களும் கனரக இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்பட்டு, வடிகான்கள் […]

Read More

ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் பிரதேச சபையும் இணைந்து “அத்தம” இரண்டாம் கட்ட தூய்மைப்பணி முன்னெடுப்பு

(செல்வி வினாயகமூர்த்தி) அரசாங்கத்தின் தூய்மையான மற்றும் அழகான சூழலை உருவாக்கும் எண்ணக்கருவிற்கமைய “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மை தின வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் ஆலையடிவேம்பு பிரதேச சபையும் இணைந்து இரண்டாம் கட்ட தூய்மைப்பணியை இன்று (19) சனிக்கிழமை முன்னெடுத்தன. இதன்போது, ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அக்கரைப்பற்று–சாகாம வீதி, வெள்ளப்பாதுகாப்பு வீதி […]

Read More

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை- ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு ரிசாட் பதியுதீன் நிந்தவூரில் அதிரடி மறுப்பு

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பாறுக் ஷிஹான் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனவும், அவரை தான் நேரில் கண்டதுமில்லை, பேசியதுமில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். […]

Read More

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் -முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் : “அனோஜனின் விடுதலை அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல, முழு இலங்கைக்கும் ஆறுதலை தரும்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் நூருல் ஹுதா உமர் சவூதி அரேபியாவில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான எஸ். அனோஜன், நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பில் தான் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ள நிலையில், இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி, அவரது விடுதலைக்காக ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு உச்சகட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை […]

Read More

அனோஜனின் விடுதலைக்காக நாளை (20) கையெழுத்து சேகரிப்பு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக, கையெழுத்து சேகரிப்பு மற்றும் கவனயீர்ப்பு மன்றாட்டம் நடைபெறவுள்ன. இனம், மதம், மொழி கடந்து மனிதாபிமானத்துடன் ஒரு உயிரைக் காக்க கரம் கொடுப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது அனோஜனின் விடுதலைக்காக பொதுமக்களிடம் கையெழுத்துகள் சேகரிக்கப்படுவதுடன், அவருக்காக குரல் கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது. 📅 திகதி: 20.09.2026 – ஞாயிற்றுக்கிழமை⏰ நேரம்: காலை 9.00 மணி📍 இடம்: நற்பிட்டிமுனை ஓராம் […]

Read More

அம்பாறையில் இந்திய முதலீட்டாளர்களுடன் வர்த்தகக் கலந்துரையாடல்; எதிர்கால முதலீட்டுக்கு வாய்ப்பு

(செல்வி வினாயகமூர்த்தி) இலங்கை–இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய முதலீட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று (18) வெள்ளிக்கிழமை அம்பாறை மொண்டி ஹொட்டலில் நடைபெற்றது. இந்தியா–இலங்கை வர்த்தகக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற இந்நிகழ்வை அம்பாறை மாவட்ட வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்ததுடன், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்கிரமாராச்சி, இலங்கை–இந்திய […]

Read More

அனோஜனின் உயிரை காப்பாற்ற அரசின் இராஜதந்திர தீவிர முயற்சி அவசியம்; நாளை உரிய தரப்புக்களை நேரில் சந்திக்கவுள்ளேன் – மனோகணேசன் எம்.பி

சவுதி அரேபியாவில் தண்டனை அறிவிக்க பட்டுள்ள இலங்கை பிரஜை சிவராசா அனோஜன் விடயத்தில், கருணை, மனிதாபிமான, அடிப்படைகளில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கனிவுடன் பரிசீலிக்குமாறு, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவுத் அவர்களுக்கு, இலங்கை குடியரசிற்கான சவூதி அரேபிய தூதுவரை நேரடியாக சந்தித்து, அவர் ஊடாக, ஒரு கூட்டு வேண்டுகோளை முன்வைக்க வேண்டும் என, தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை (PCTSP) […]

Read More

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை – சவூதி அரசிடம் கருணை கோர இலங்கை அரசாங்கம் தீவிர இராஜதந்திர முயற்சி

“මගේ රත්තරන් පුතාව බේරා දෙන්න” – අනෝජන්ගේ මව ජනාධිපතිවරයාගෙන් කඳුළු පිරි ඉල්ලීමක් සෞදි රජයෙන් කරුණාව ඉල්ලා සිටීම සඳහා ශ්‍රී ලංකා රජය දැඩි රාජ්‍යතාන්ත්‍රික උත්සාහයක பாறுக் ஷிஹான் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் அழுது புலம்பியவாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நபிகள் நாயகத்தை […]

Read More

எனது மகனை உயிரோடு மீட்டுத் தாருங்கள்! கதறிஅழுது அனோஜனின் தாயார் மன்றாட்டம்! இது ஓர் உயிருக்கான போராட்டம் என்கிறார் கோடீஸ்வரன் எம்பி.!!

எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை மகனை எப்படியாவது உயிரோடு மீட்டுத்தாருங்கள் என்று அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படும்  அனோஜனின் தாயார் கதறிஅழுது மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்தார் . கல்முனையையடுத்துள்ள நற்பிட்டிமுனையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (18) வெள்ளிக்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கதறி அழுதார். அவர் மேலும் கூறுகையில் : அவர் செய்தது தவறுதான் .அதற்காக அவரும் ஏலவே மன்னிப்பு கேட்டிருந்தார். நாங்களும் மன்னிப்பு கேட்கின்றோம். […]

Read More

விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்: வீடுகள், வெற்றிடங்கள் தீவிர பரிசோதனை!

பொதுமக்கள் தமது சூழலைத் தூய்மையாக வைத்திருக்க சுகாதாரப் பிரிவினர் வேண்டுகோள் பாறுக் ஷிஹான் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ், கல்முனை மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் இன்று (18) தீவிர ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் நெறிப்படுத்தலில், […]

Read More