September 19, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அனோஜனின் உயிரை காப்பாற்ற அரசின் இராஜதந்திர தீவிர முயற்சி அவசியம்; நாளை உரிய தரப்புக்களை நேரில் சந்திக்கவுள்ளேன் – மனோகணேசன் எம்.பி

அனோஜனின் உயிரை காப்பாற்ற அரசின் இராஜதந்திர தீவிர முயற்சி அவசியம்; நாளை உரிய தரப்புக்களை நேரில் சந்திக்கவுள்ளேன் – மனோகணேசன் எம்.பி

சவுதி அரேபியாவில் தண்டனை அறிவிக்க பட்டுள்ள இலங்கை பிரஜை சிவராசா அனோஜன் விடயத்தில், கருணை, மனிதாபிமான, அடிப்படைகளில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கனிவுடன் பரிசீலிக்குமாறு, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவுத் அவர்களுக்கு, இலங்கை குடியரசிற்கான சவூதி அரேபிய தூதுவரை நேரடியாக சந்தித்து, அவர் ஊடாக, ஒரு கூட்டு வேண்டுகோளை முன்வைக்க வேண்டும் என, தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை (PCTSP) அங்கத்தவ சகோதர கட்சி தலைவர்களிடம் கோரி உள்ளேன். இது தொடர்பில் நாம் பேரவைக்குள் அவசரமாக உரையாடுகின்றோம் என மனோகணேசன் எம்.பி தெரிவித்தார்.

மேலும், இவ்விடயத்தை நமது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் ஊடாகவும் முன்னெடுத்து, இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக இவ்விடயத்தை சவூதி அரேபியா அரசிடம் எடுத்து செல்லுமாறும் கோருகிறோம்.

.நாளை இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் உட்பட சம்மந்தப்பட்டோரை நேரிலி சந்திக்க முயற்சி எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட்ளளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *