September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

கைதானார் விமல் வீரவச!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகை நிகழ்வை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.சி றிஸ்வான் இடை நிறுத்தம்

பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வான் நீதிச்சேவை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (22) முதல் இடை நிறுத்தி உள்ளது. இது தொடர்பான தொலை நகல் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிரான விசாரணைகள் நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Read More

நற்பிட்டிமுனையில் “இளம் சிட்டுக்களின் ராகம்” இசை விழா மே 30ல் நடைபெறும்!

அம்பாறை மாவட்டத்தில் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் “இளம் சிட்டுக்களின் ராகம்” எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் மே 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், மத்திய கலாசார நிலையம் மற்றும் கல்முனை “சஹ்ரம்” இசைக்குழு இணைந்து இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளன. இந்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் 30.05.2026 அன்று மாலை 6.00 மணிக்கு நற்பிட்டிமுனை பொதுமைதானத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் பல இளம் […]

Read More

வித்தியா கொலை வழக்கு தண்டனை கைதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கொன்றிற்காக யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 46 வயதுடைய பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற மரண தண்டனை கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

வாகன கடன் மற்றும் லீசிங்கிற்கு புதிய கட்டுப்பாடுகள் – மத்திய வங்கி அறிவிப்பு

🚘 இலங்கை மத்திய வங்கி (CBSL) மோட்டார் வாகனங்களுக்கான கடன் மற்றும் லீசிங் வழங்குதலில் புதிய Loan-to-Value (LTV) வரம்புகளை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2026 மே 25 முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு, அதன் சந்தை மதிப்பின் அதிகபட்சம் 60% வரை மட்டுமே கடன் அல்லது லீசிங் வசதி பெற முடியும். அதேவேளை, புதிய அல்லது ஒரு வருடத்திற்குக் குறைவாக […]

Read More

சாய்ந்தமருது நகர சபை விவகாரம்;ஏ.எல்.எம். சலீம் அவர்களுடன் மறுமலர்ச்சி மன்றம் சந்திப்பு.!

✍️அஸ்லம் எஸ்.மௌலானா சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகள் தொடர்பாகமுன்னாள் பிரதேச செயலாளரும் ஓய்வுநிலை நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம் அவர்களை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றப் பிரதிநிதிகள் இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான எம்.ஐ. அப்துல் ஜப்பார் தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது. சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி சட்ட வலுவானது என்றும் அதன்படி சாய்ந்தமருது நகர சபை ஸ்தாபிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வட்டாரப் பிரிப்புக்கான எல்லை நிர்ணயத்தை […]

Read More

பாணமை சந்தியில் உகந்தைக்கான திசை நிர்ணய  வீதி அறிவித்தல் பலகை இல்லை; நடவடிக்கை எடுக்குமா வீதி அபிவிருத்தி அதிகாரசபை?

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் பாணமை சந்தியில் இருந்து , காட்டிற்குள் இருக்கும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயம் நோக்கிச் செல்லும் பிரதான வீதிக்கான திசை நிர்ணய வீதி அறிவித்தல் பலகை இதுவரை பாணமைச் சந்தியில் நிறுவப்படவில்லை என பக்தர்களும் பொதுமக்களும் கவலை வெளியிட்டுள்ளனர். பாணமை சந்தியிலிருந்து உகந்தமலை ஆலயத்திற்குச் செல்லும் பாதை பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.  குறிப்பாக வருடாந்த உற்சவ காலங்களிலும் கதிர்காமம் பாதயாத்திரை நடைபெறும் நாட்களிலும் ஆயிரக்கணக்கான மூவின […]

Read More

பண்பாட்டு கலாச்சார பேரணியுடன் நடைபெற்ற திருக்கோவில் வலய மட்ட தமிழ் மொழி தினப் போட்டி!

(வி.ரி.சகாதேவராஜா) அகில இலங்கை தமிழ் மொழித் தினத்தையொட்டிய திருக்கோவில் வலய மட்ட போட்டிகள் நேற்று  (23) சனிக்கிழமை பல பண்பாட்டு கலாச்சார பாரம்பரிய பேரணியுடன் தம்பிலுவில்  மத்திய கல்லூரியில்  நடைபெற்றன.  முன்னதாக,  திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து சுவாமி விபுலாநந்தர் , சேர சோழ பாண்டியர் ,திருவள்ளுவர், ஔவையார், தனிநாயகம் அடிகளார், தமிழ்த்தாய் உள்ளிட்ட பல பண்பாட்டு கலை அம்சங்களுடன் கூடிய பாரம்பரிய நிகழ்ச்சிகள் அடங்கிய பேரணி தம்பிலுவில் மத்திய கல்லூரி வரை சிறப்பாக நடைபெற்றது. பல […]

Read More

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்? இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் தீவிரம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் நிறுத்தம் மற்றும் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி Donald Trump, “ஒப்பந்தத்தின் பெரும்பாலான அம்சங்கள் பேசி முடிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக 60 நாள் போர்நிறுத்தம், Hormuz நீரிணை மீள திறப்பு, ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு தளர்வுகள் மற்றும் அணு திட்டம் தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறலாம் என […]

Read More