September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

இலங்கை ஏற்றுமதி வருமானம்: 4 மாதங்களில் $5.7 பில்லியனை கடந்தது

உலகளாவிய ரீதியில் நிலவும் சவாலான பொருளாதாரச் சூழல்களுக்கு மத்தியிலும், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் (பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளடங்களாக) 5,784.38 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4.3% வளர்ச்சியாகும். குறிப்பாக 2026 ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,380.93 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன். இது கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தை விட 6% […]

Read More

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கராத்தே போட்டிக்கு JKMO உறுப்பினர் நிவலக்ஜன் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று (24) நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கராத்தே தகுதிகாண் போட்டியில், பொறியியல் பீட முதலாம் ஆண்டு மாணவர் T. நிவலக்ஜன் அபார திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், விரைவில் நடைபெறவுள்ள அனைத்து இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் (All Sri Lanka University Games) பங்குபற்றுவதற்கான தகுதியையும் அவர் உறுதி செய்துள்ளார். ஜப்பானிய கராத்தே மருக்கோ (JKMO) கழகத்தின் உறுப்பினரான நிவலக்ஜன், கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் […]

Read More

கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசித் திருக்குளிர்த்தி உற்சவம் ஆரம்பம்!

கல்முனை:வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை மாநகர் அருள்மிகு கடற்கரைக் கண்ணகை அம்மன் ஆலயத்தின் நடப்பு பரபாவ வருடத்திற்கான வருடாந்த வைகாசித் திருக்குளிர்த்தி மகோற்சவம், இன்று (25.05.2026) திங்கட்கிழமை திருக்கதவு திறத்தலுடன் பக்திப் பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. இன்று மாலை 6.30 மணிக்கு அம்பாளின் திருக்கதவு திறக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து முதலாம் நாள் இரவுப் பூசையும், பாரம்பரிய வழக்குரைப்பாடல் பாடுதலும் ஆரம்பமாகவுள்ளன. தொடர்ந்து வரும் நாட்களில் தினமும் பிற்பகல் 1.00 மணிக்கு விசேட பூசைகளும், மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ சத்திய […]

Read More

இன்று காரைதீவு கண்ணகை அம்பாளின்  வைகாசி திருக்குளிர்த்திச் சடங்கு  ஆரம்பம்.

(வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு  ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு இன்று 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை  கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன்  ஆரம்பமாகவுள்ளது. ஆலயத்திலிருந்து தர்மகர்த்தாக்கள் கப்புகனார் சகிதம் பக்தர்கள் கடலுக்குச்சென்று தீர்த்தம் எடுத்து வரும்வழியில் கலயாணக்கால் முறித்து அதனைக்கொணர்ந்து ஆலயத்தில் நடுவார்கள். தொடர்ந்து ஏழு நாட்கள் சடங்கு நடைபெற்று ஜூன் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் சடங்கு நிறைவடையும்.  சடங்குகள் அனைத்தும் ஆலய கப்புகனார்  […]

Read More

இந்திய நன்கொடையாக இலங்கை பொலிஸாருக்கு 134 கெப் வாகனங்கள் கையளிப்பு!

இந்தியா அரசாங்கம், இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கிய 134 கெப் ரக வாகனங்களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றியைத் தெரிவித்தார். மேலும், இந்த திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது பணியாளர்களுக்கும் அவர் […]

Read More

சந்நிதியில் நடந்தது என்ன? பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி விளக்குகிறார் .

  (  வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிகநீண்ட பாதயாத்திரையின்  நேற்றைய முதல் நாள்(24) பயணத்தின் போது அங்கே குழப்பம் ஏற்பட்டு இருந்தது . அதனால் காலை 9:00 மணிக்கு  புறப்பட வேண்டிய இப் புனித பாதயாத்திரை 12:00 மணியளவில்தான் அங்கிருந்து புறப்பட நேர்ந்தது . இது தொடர்பாக கடந்த 14 வருடங்களாக பாதயாத்திரையில் ஈடுபட்டும், கடந்த ஏழு வருடங்கள் தலைமை தாங்கியும் , மூன்று மாகாணங்களையும் […]

Read More

காரைதீவின் முதல் மருத்துவர் பரஞ்சோதி லண்டனில் காலமானார்!

( வி.ரி. சகாதேவராஜா) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் பிறந்த பழம் பெரும் தமிழ்க் கிராமமான காரைதீவின், முதல் மருத்துவர் டாக்டர் செல்லத்துரை  பரஞ்சோதி லண்டனில் நேற்று(24) தனது 80  ஆவது வயதில் காலமானார். காரைதீவைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட காரைதீவின் முதலாவது வைத்திய கலாநிதியும், புகழ் பூத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் முதலாவது வைத்தியருமான டாக்டர் செல்லத்துரை பரஞ்சோதி நேற்று லண்டனில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற முன்னாள் மாவட்ட தந்தி இலாகா பரிசோதகரும் […]

Read More

துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த்mதிருச்சடங்கு வைபவம் இன்று ஆரம்பம்!

செல்லையா பேரின்பராசா  வரலாற்று சிறப்பு மிக்க துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருச்சடங்கு வைபவம் இன்றிரவு செவ்வாய்க் கிழமை (26.05.2026) இடம்பெறும் திருக்கதவு திறத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 02.06.2026 செவ்வாய்க் கிழமை அதிகாலை இடம்பெறும் திருக்குளிர்த்தி பாடல் மற்றும் பொங்கல் வைபவத்துடன் இனிதே நிறைவுபெறவுள்ளது. இத் திருச்சடங்கு வைபவத்தின் விசேட நிகழ்வுகளான அம்மனின் ஊர்க்காவல் வைபவம் மற்றும் கன்னிக்கால் வெட்டும் நிகழ்வுகள் என்பன முறையே 29.05.2026 வெள்ளிக் கிழமையும் 31.05.2026 ஞாயிற்றுக் கிழமையும் இடம்பெறவுள்ளது. […]

Read More

செய்திக்கு பலன் கிடைத்தது

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும் என செய்தி ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எமது ஊடகம் பிரசுரித்திருந்தது.இச்செய்தியில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் ஆயுள்வேத மத்திய மருந்தகம் மற்றும் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடந்த 2004 ஆண்டு சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் இதுவாகும்.தற்போது இக்கட்டடத்தில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதுடன் பாதுகாப்பற்ற இடமாகவும் காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் […]

Read More

டிக்கோயா இரட்டை கொலை: சந்தேகநபர் தடயவியல் வைத்திய அதிகாரியிடம் ஒப்படைப்பு – வயோதிப தம்பதியினரின் உடல் கண்ணீரஞ்சலியுடன் நல்லடக்கம்

ஹட்டன் டிக்கோயா நகரில் இடம்பெற்ற அதிர்ச்சி அளித்த இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, தடயவியல் வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். டிக்கோயா பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்துடன் இணைந்த குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை (21) வயோதிப தம்பதியினர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொகவந்தலாவை பெற்றோசோ பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த சந்தேகநபர் பொதுமக்களின் தகவலின் பேரில் சனிக்கிழமை (23) மாலை கைது […]

Read More