September 16, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > நற்பிட்டிமுனையில் “இளம் சிட்டுக்களின் ராகம்” இசை விழா மே 30ல் நடைபெறும்!

நற்பிட்டிமுனையில் “இளம் சிட்டுக்களின் ராகம்” இசை விழா மே 30ல் நடைபெறும்!

அம்பாறை மாவட்டத்தில் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் “இளம் சிட்டுக்களின் ராகம்” எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் மே 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், மத்திய கலாசார நிலையம் மற்றும் கல்முனை “சஹ்ரம்” இசைக்குழு இணைந்து இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளன.

இந்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் 30.05.2026 அன்று மாலை 6.00 மணிக்கு நற்பிட்டிமுனை பொதுமைதானத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் பல இளம் பாடகர்கள் மற்றும் கலைத்திறமையாளர்கள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரப் பதாகைகள் தற்போது பல பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.