September 22, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > சிவராசா அனோஜனின் விடுதலை வேண்டி கல்முனையில் விசேட பூஜை வழிபாடு!

சிவராசா அனோஜனின் விடுதலை வேண்டி கல்முனையில் விசேட பூஜை வழிபாடு!

சௌவியதாசன்.

சவுதி அரேபிய நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் அவர்களின் உடனடி விடுதலையை வேண்டியும், அவரது குடும்பத்தினருக்கு மன ஆறுதலை வழங்கப் பிரார்த்தித்தும் விசேட “மண்டியிட்டு மன்றாடும் விசேட பூஜை வழிபாடு” உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டது.


​கல்முனை புலவப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற இப் சிறப்பு வழிபாட்டு நிகழ்வில், விநாயகப் பெருமானிடம் மண்டியிட்டு மன்றாடி விசேட பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.


​சவுதி அரேபியாவில் தண்டனைக்குள்ளாகியுள்ள அனோஜன் அவர்களின் உயிரைக் காப்பாற்றி, அவரை மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்துவரும் நோக்கிலும், பாதிக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்திற்குத் தேவையான மன தைரியத்தையும் ஆறுதலையும் இறைவனிடம் வேண்டியும் அமைக்கப்பட்ட இப் பிரார்தனை நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள் பலர் கலந்துகொண்டனர்.


​இந்நிகழ்வானது கல்முனை வெஸ்லியன் 78/82 அமைப்பு மற்றும் அம்பாறை கிழக்கு தமிழர் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *