October 27, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > மாணிக்கமடு திருவள்ளுவர் அறநெறிப் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு.

மாணிக்கமடு திருவள்ளுவர் அறநெறிப் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு.

(செல்வி வினாயகமூர்த்தி -செளவியதாசன் )

அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு திருவள்ளுவர் அறநெறிப் பாடசாலைக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (26) திங்கட்கிழமை இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் தலைமையில் நடைபெற்றது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனனின் வழிகாட்டலுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில், அறநெறிப் பாடசாலையின் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்ஷார், கணக்காளர் எ.எல். மொகமட் ரிபாஸ், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *