பா. மேனன்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயம் மற்றும் களுதாவளை மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவரான தங்கராசா சினோஜன், இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் உயிரிச் சக்தித் துறையின் (Bioenergy) உதவி விரிவுரையாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தனது ஆரம்பக் கல்வியை (தரம் 1 முதல் 11 வரை) மகிழூர் கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் கற்ற இவர், பின்னர் உயர்தரக் கல்வியை (A/L) களுதாவளை மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்பப் பிரிவில் (Technology Stream) பயின்றார்.
உயர்தரப் பரீட்சையில் சிறந்த சித்திகளைப் பெற்று இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான இவர், அங்கு உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில், உயிரிச் சக்தித் துறையைச் (Bioenergy) சிறப்புத் துறையாகக் கற்று இளமாணிப் பட்டத்தைப் (Bachelor of Biosystems Technology in Bioenergy) பெற்றுக்கொண்டார்.
தற்போது தனது திறமையினாலும், அர்ப்பணிப்பினாலும், தனித்துவமான தனது ஆளுமையினாலும் தான் பயின்ற சபரகமுவ பல்கலைக்கழகத்திலேயே உயிரிச் சக்தித் துறையின் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி, கிராமத்திற்கும் தான் கல்வி கற்ற பாடசாலைகளுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவருக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.